நள்ளிரவில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

baby_abortion_001சீனாவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்படி பெற்றுக் கொள்பவர்களுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்து வைக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட அளவிலான தொகையும் அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் Liu Xinwen(வயது 33) என்ற பெண்ணுக்கு கட்டாயமாக கருக்கலைப்பு செய்து வைக்கப்பட்டுள்ளது.

ஆறு மாத கர்ப்பிணி பெண்ணான இவரை, நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளனர்.

இதுகுறித்து குறித்த பெண்ணின் கணவர், நள்ளிரவில் சாங்டங் மாகாண அதிகாரிகள் வந்து வலுக்கட்டாயமாக தனது மனைவியை அழைத்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஐந்து மணிநேரமாக தனது மனைவியை தேடி அலைந்ததாகவும், தான் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாகவே கருக்கலைப்பு செய்வதற்கான ஊசியை போட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஊசி போட்ட பின்னர் கருப்பையிலேயே குழந்தை இறந்துவிட்டதாகவும், மறுநாள் குழந்தையின் சடலத்தை தாயின் வயிற்றில் இருந்து எடுத்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும் கருக்கலைப்பு செய்வதற்கான காகிதங்களில் தனது மனைவியை கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.