எகிப்தில் ஞாயிற்றுக்கிழமை போலீஸார்-முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் 1973ஆம் ஆண்டு அரேபிய-இஸ்ரேலிய போர் தினத்தை ராணுவ ஆதரவாளர்கள் விழாவாக கொண்டாடினார்கள்.
அப்போது முன்னாள் அதிபர் மோர்சியின் ஆதரவாளர்கள் மத்திய கெய்ரோ சதுக்கத்தில் போராட்டம் நடத்துவதற்காக குவிந்தனர்.
அங்கு போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்களை கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். 83 பேர் காயம் அடைந்ததாக அவசர சேவை தலைவர் காலித் காடிப் தெரிவித்தார்.