தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் சாவு

Souththailandmapதெற்கு தாய்லாந்து பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 2 போலீஸார் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தென்பகுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் பிரமோத் பிரோம் அளித்த பேட்டியில், “தெற்கு தாய்லாந்தின் நராதிவாத் கிராமத்தில் பயங்கரவாத அமைப்பினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதைத் தடுக்க, ராணுவமும் போலீஸாரும் இணைந்து அந்தப் பகுதிகளில் சனிக்கிழமை தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 போலீஸார் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளும் இந்த சம்பவத்தில் இறந்துள்ளனர். 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

தெற்கு தாய்லாந்து பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகள் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களால் இதுவரை 5,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பயங்கரவாத அமைப்புக்கும் தாய்லாந்து அதிகாரிகளுக்கும் இடையே மலேசியா அரசு பலமுறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இந்த மாதத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.