சிரியாவில் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஓராண்டு காலம் ஈடுபடவுள்ள நிபுணர்கள் எதிர்பாராத பல பேராபத்துக்களைச் சந்திக்க நேரிடும் என ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே ராணுவம் நிகழ்த்திய ரசாயன ஆயுத தாக்குதலில் 1400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சிரியா அரசிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்க கடந்த மாதம் 27 ஆம் தேதி ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பணியில் ஐ.நாவும் ரசாயன ஆயுத தடுப்பு நிறுவனமும் கூட்டாக ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானத்தை சிரியாவிற்கு ஆதரவு அளித்து வரும் ரஷியாவும், எதிராக செயல்பட்டு வரும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. இதனையடுத்து சிரியாவில் ரசாயன ஆயுத சோதனை மற்றும் அதனை அழிக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது எண்ணிக்கையை 100 பேராக அதிகரிக்க பான்-கி-மூன் பரிந்துரை செய்துள்ளார்.
சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்க ஒராண்டு காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அடுத்த ஆண்டு ஜூன் மாத இறுதி வரை இந்தப் பணி நீடிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பான்-கி-மூன், இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள நிபுணர்களுக்கு எதிர்பாராத பேராபத்துக்கள் அதிக அளவில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த பான்-கி-மூன் இன்னும் உயிருடன் இருப்பதுதான் மக்களுக்கு பேராபத்து!