இலங்கை காமன்வெல்த் மாநாட்டை மலேசிய புறக்கணிக்க வேண்டும்

kula-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 10, 2013.

வருகின்ற நவம்பர் மாதம் 15 – 17 ஆம் தேதிகளில் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வெண்டுமென பிரதமரை மஇகா கேட்டுக் கொள்ளவேண்டும்.

 

மனித உரிமை மீறல்களில் முதன்மை இடம் வகிக்கும் இலங்கை அரசு, தான் நடத்தும் காமன்வெல்த் மாநாட்டை எப்படியும் வெற்றிகரமாக நடத்தி உலக நாடுகள் அதன் மேல் கொண்டிருக்கும் ஆத்திரத்தையும் அவநம்பிக்கையயும் போக்கி நற்பெயர் வாங்கிக் கொள்ளலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறது.

 

இலங்கை தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட மனித உரிமை அத்துமீறல்களைக் கண்ட பல நாடுகள் இந்த மாநாட்டை புறக்கணிக்க ஏற்கனவே முடிவு செய்துவிட்டன. அந்த வரிசையில் கனடா, ஆஸ்திரேலியா மற்றும்  நியுசீலாந்து ஆகிய நாடுகள் சேர்ந்துள்ளன.

 

இந்தியாவை அடுத்து தமிழர்கள் அதிகமாக வாழும் நாடு மலேசிய என்கின்ற வகையிலும், மலேசிய தமிழர்கள் இலங்கையில் நடக்கும் இனப்படு கொலைகளை கண்ணீருடன்  தீவிரமாக எதிர்க்கும் இனம் என்கின்ற வகையிலும் மலேசிய பிரதமர் இந்த மாநாட்டில் கட்டாயமாக கலந்துக் கொள்ளக் கூடாது என்று எதிர்பார்க்கின்றனர்.

 

சமீபத்தில், ஐக்கிய நாட்டு சபை இலங்கைக்குக் எதிராக தீர்மானத்தைக் கொண்டு வந்த பொழுது அந்த வாக்கெடுப்பில் மலேசிய 7 najib கலந்துகொள்ளவில்லை. மலேசியர்கள், குறிப்பாக தமிழர்கள், அந்த வாக்கெடுப்பில் மலேசிய கலந்து கொண்டு இலங்கைக்கு  எதிராக வாக்களிக்க வேண்டுமென்று பெரிதும் எதிர்பார்த்தனர். இருப்பினும் மலேசியா அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தது ஒரு வித ஆறுதலைத் தந்தது.

 

இதனை வலியுறுத்தி ..காவை பிரதிநிதித்து அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கும்  ஜி. பழனிவேலும், எஸ். சுப்ரமணியமும் பிரதமர் இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளக்கூடாது என்று அவரைக் கேட்டுக்கொள்ளவேண்டும்.

 

இன உணர்வினாலும், தொப்புள்கொடி உறவினாலும், மனித நேயத்திற்கு எதிரான கொடுமைகளை இலங்கை அரசு செய்ததாலும், பிரதமர் இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று அந்த இரு அமைச்சர்களும் அமைச்சரவையில் தைரியமாக எடுத்துக்கூறவேண்டும்.

 

1 micபாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசு செய்யும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்து இஸ்ரேலுடன் இது நாள் வரை எந்தத் தொடர்பும் வைத்திராத மலேசிய அரசாங்கம், இந்த விடயத்திலும் தன்னுடைய இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாததன் வழி அந்த கொடுங்கோல் அரசுக்கு தெரிவிக்கவேண்டும்.

 

இந்த வேண்டுகோளையும் மீறி  பிரதமர் அந்த மாநாட்டுக்கு செல்வாரேயானால் அவர் மலேசிய தமிழர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்றே அர்த்தம் கொள்ளப்படும்.

 

இது மலேசிய இந்தியர்கள் ..காவின் மேல் வைத்துள்ள நம்பிக்கையை மேலும் நலிவுறச் செய்யும். இதை ..கா.தலைவர்கள் உணர்ந்து இந்த மலேசிய தமிழர்களின் எதிர்பார்ப்பை மலேசிய அராசாங்கம் பூர்த்தி செய்யாத பட்சத்தல் ..கா பாரிசன் கூட்டை விட்டு விலகுவது நல்லது.

 

ஜி. பழனிவேலும் எஸ். சுப்ராவும் இதனைச் செய்வார்களா? இல்லை எப்பொழுதும் போல் மௌனமாகவே இருபார்களா? தெரிந்து கொள்ள மலேசிய தமிழர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்

TAGS: