மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் பதவி விலக ஆயத்தமாக உள்ளார். ஆனால், துணைத் தலைவர் லியோ தியோங் லாயும் பதவி விலக வேண்டும் என்கிறார்.
“நான் போகத் தயார். ஆனால், கூடவே லியோவும் பதவி விலக வேண்டும்”. இன்று பிற்பகல் கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது சுவா இவ்வாறு கூறினார்.
“இது வேதனை அளிக்கும் முடிவுதான். நான்காண்டுகளாக அவருடன் வேலை செய்திருக்கிறேன். அவர் ஒரு பலவீனமான தலைவர். சொந்த நிலைப்பாடு கிடையாது. பெரிய விவகாரம் என்கிறபோது ஓடி ஒளிந்துகொள்வார்”, என்று சுவா கூறினார்.
ம சீ ச பொம்பள வீடியோ மன்னன் ச்சுவ ஒரு வழியா ம சீ ச வா மூடிவிட்டு தான் போவான் போல? டி ஏ பி யோட ஏதோ பயங்கர செட் ஆப் மாறி தெரியுது. கேளபுங்கடா !
ஏன்தான் இந்த சுவா இன்னும் சுத்தமில்லாத புத்தியுடன் இருகின்ராரோ தெரியவில்லை. நான்தான் கெட்டேன், என்னோட நீயும் கெடு என்ற கெட்ட புத்தி எப்பதான் ம.சீ.ச. தலைவர்களை விட்டு ஒழியுமோ தெரியவில்லை. இருந்தாலும், ம.சீ.ச., ம.இ.க. தலைவருக்கு ஒரு முன்னோட்டத்தைக் கொடுத்திருக்கின்றது. தெற்காசிய சிறப்பு தூதர் பதவி கூடிய விரைவில் முடக்கப் படும் நிலையில், நம்ப ஐயப்ப பக்தரும் இதே பல்லவிதான் பாடப் போகின்றார். பாவம் இன்னொரு முருக பக்தர் இலவு காத்த கிளியாகப் போகின்றார்? இரண்டு முருக அவதாரங்ககளுக்கும் என்னே ஒரு போராட்டம் பாருங்கள்! வெற்றிப்படியில் காலெடுத்து வைத்திருக்கும் சரவண பக்தர் எகத்தாள சந்தோஷத்தில் உள்ளாராம். பார்த்து, உங்க சந்தோஷத்தில் கண்ணுப்பட்டுட போவது கண்ணா!