கோலாலும்பூர் மாநாட்டு மையத்துக்கு வெளியில் ட்ரேன்ஸ்-பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மழை பெய்தபோதும் மழையில் நனைந்துகொண்டே தங்கள் எதிர்ப்பைப் பாடல் மூலமாக வெளிப்படுத்தினார்கள்.
அந்த ஆர்ப்பாட்டம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும்போது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்,ஒபாமா வரவில்லை என்பதால் அவரின் பிரதிநிதியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வருகை மேற்கொண்டிருக்கும் வேளையில் அந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள், மலேசியா டிபிபிஏ பேச்சுகளிலிருந்து வெளியேற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.