காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்குப் பகுதியில் ஐ.நா.வின் ஹெலிகொப்டரை மார்ச் 23(எம்23) இயக்கத் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இந்த சம்பவம் வடக்கு கிவு மாகாணத்தின் ருமாங்காபோ பகுதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது.
இப்பகுதியில் கடந்த 18 மாதங்களாக அரசுப் படையினருக்கும், ஐ.நா அமைதிப்படையினருக்கும் எதிராக மார்ச் 23 (எம்23) இயக்கத் தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர்.
காங்கோவிலுள்ள ஐ.நா. தூதரகத்தின்(எம்ஓஎன்யுஎஸ்சிஓ) தலைவர் மார்டின் கோப்ளர் கூறுகையில், நாங்கள் காங்கோவின் வான்பகுதியில் பறப்பதை எம்23 இயக்கத் தீவிரவாதிகள் தடுக்க இயலாது.
பொதுமக்களை பாதுகாக்கும் அனைத்துப் பணியிலும் ஈடுபடுவோம், தேவை ஏற்பட்டால் படைகளையும் பயன்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அரசு மற்றும் ஐ.நா-வின் படை வீரர்கள் தாக்குதல் நடத்த வருவதாக நாங்கள் கருதியதாலேயே அந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினோம் என தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.