ரஷ்யாவில் வலதுசாரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து எழுந்த வன்முறைச் சம்பவத்தால் சுமார் 1,600 பேரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.
அந்த இளைஞரைக் கொன்றது காகசஸ் இனத்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வலதுசாரிகள் ஞாயிற்றுக் கிழமை பிரியுலியோவில் திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் அவர்களில் 400 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கைது சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு மேலும் வன்முறை பரவியுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் 1,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.