ஆப்கானில்தானில் செவ்வாய்க்கிழமை பக்ரீத் பண்டிகை தொழுகையின்போது, நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அந்நாட்டின் மாகாண ஆளுநர் அர்சலா ஜமால் கொல்லப்பட்டார்.
காபுல் அருகே லோகார் என்ற இடத்தில் உள்ள பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை தொழுகையில், ஆளுநர் அர்சலா ஜமால் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு மைக்ரோபோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் முகமது தர்வேஸ் தெரிவித்தார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மேலும் 8 பேர் காயமடைந்தனர். இதற்கு, எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தலிபான் பயங்கரவாதிகள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என கருதுகிறோம்’ என்றனர்.