ஆஸ்திரேலியாவில் அரசாங்க உதவிச் சம்பளத்தில் படிக்கும் மலேசிய மாணவர்கள் அன்வார் இப்ராகிமின் நிகழ்வுக்குச் செல்லக்கூடாது என அங்குள்ள பொதுச் சேவைத் துறை (பிஎஸ்டி)-இன் மாணவர் ஆலோசகர் “எச்சரிக்கை விடுத்தது” உண்மையா என்று பிகேஆர் வினவியுள்ளது.
சனிக்கிழமை, ஏடிலேய்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வாரின் நிகழ்வுக்கு பிஎஸ்டிமாணவர்கள் செல்லக்கூடாதென்று அவர் மாணவர்களுக்கு கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுவதைச் சுட்டிக்காட்டி பிகேஆர் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பாட்சில் இன்று காலை விடுத்த அறிக்கையில் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.
மீறிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்திருந்தாராம்.
“அவ்வதிகாரி அப்படி ஒரு கடிதம் அனுப்பியது உண்மையா? பிஎஸ்டி, அதன் அலோசகர் அலுவலகம், நியு சவுத் வேல்ஸில் உள்ள மலேசிய தூதரக அலுவலம் ஆகியோரிடமிருந்து விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்”,என பாஹ்மி கூறினார்.