காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் தாம் சிறையில் தாம் தொடர்ந்து சித்ரவதை செய்யப்படுவதாக பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் புகார் செய்துள்ளார்.
“தீய நோக்கத்துடன் நான் காஜாங் சிறையில் மிகவும் அஞ்சப்படும் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் 27 நாள்களாக அடைத்து வைக்கப்படிருக்கிறேன்”, என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
அக்கடிதம் பிரதமர் நஜிப் மற்றும் உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிடி ஆகியோரின் அலுவலகங்களுக்கு நேற்றும் பேக்ஸ் செய்யப்பட்டது.
“நான் தனி அறைச் சிறையில் தனியாக ஒரு நாளில் 24 மணி நேரமும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறேன். சூரிய ஒளியோ சுத்தமான நல்ல காற்று இல்லாத, மங்கலான ஒளியுடைய அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளேன்”, என்று அவர் கூறுகிறார்.
தம்மை காஜாங் சிறையிலுள்ள மருத்துவப் பிரிவில் மீண்டும் வைக்குமாறு அவர் நஜிப்பை கேட்டுக் கொண்டுள்ளார்.
பி. உதயகுமார் அவர்களே உங்களை பார்க்க வேதனையாகவும் கவலையாகவும் இருக்கிறது.
இனத்துக்காக இன்னலை அனுபவிக்கும் தங்களுக்கு கடவுள் துணை இருப்பார்..!
ஒரு மாபெரும் பேரணியை 2007-ஆம் ஆண்டு வழி நடத்தி, 2008-ஆம் ஆண்டு தேர்தலில் குறிப்பாக இந்தியர்களை சிந்திக்க்க வைத்து அம்னோ-பாரிசானின் பல ‘நாற்காலிகளை’ கவிழ வைத்தீர்கள்;
கிளாந்தானோடு மேலும் மூன்று மாநிலங்கள் அவர்களிடமிருந்து
கை நழுவியது!!! சென்ற தேர்தலில் எப்படியோ திருகுத் தாளம் தட்டி இரண்டு மாநிலங்களை பிடுங்கிக் கொண்டார்கள். மேலும் சில ‘நாற்காலிகள்’ கவிழ்ந்தன… அதற்காகத் தான் அந்த ‘எருமைப் புத்தி’காரர்களின் இந்த பழி வாங்கும் செயல்!! அவர்களும் நாளும்
ஐந்து முறை தொழுகிறார்கள்!! நீங்களும் இந்து தெய்வங்களை
வணங்குபவர் தான்!! பொறுமையுடன் இருங்கள் இயற்கை உங்களை காப்பாற்றும்..
காப்பாற்றும்….
பிரதமர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் .
நீங்கதான் ரொம்ப திறமை சாளியாச்சே, டீலா நோ டீலா என்று பேசி முடிக்க வேண்டியதுதானே ! ஹிண்ட்ராப் ஒரு NGO வாக இருந்திருந்தால் மரியாதையாவது மிஞ்சி இருக்கும், அரசியல் ஆசை வந்து எல்லாம் அபத்தமாகி விட்டது ! அரசியல் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் போன உனக்கு இதுவும் வேண்டும், மலேசிய இந்தியருக்கு குறிப்பாக ஹிந்துகளுக்கு ஒரு போர் வாளாக இருந்த ஹின்றப்பை குட்டி சுவராகிக்கி விட்டனர் , தம்பி சுகம் காண்கிறான், அண்ணன் பிலிம் காட்டுகிறான் !
இவரை இப்படியே அம்போ என்று விட்டு விடலாமா.. ஆளும் கட்சி, எதிர் கட்சி, எல்லாம் ஒன்று பட்டு எதாவது செய்யலாமே..
நம் சமுதாய தலைவர்கள் குரல் கொடுகணம்.இவர்கள் வாய் தொறந்தால் என்ன சார்?கேவலமாக இருக்குறது.உதயகுமாரை காபதுங்கள்.அது உங்களோடை கடமை. சார்….!துங்காதிரகள்.
இது நம்ப முடியாத சொதப்பல்… ஒரு சேத ஈயை நாய்கள் கடிக்க முற்சிப்பது போல் உள்ளது.அவரின் லாயர்கள் என்ன ஈ புடிக்க போன்னார்களா?
நம்மை பழிவாங்கும் படலம் தான் இப்பொழுது நடப்பது–கேட்க நாதி இல்லை — எத்தனையோ நம்மவர்கள் காவல் குண்டர்களினால் கொல்லப்பட்டனர்– இன்னும் என்ன என்ன நடக்குமோ
நம் எதிர்காலம் இந்நாட்டில் கேள்விக்குறியே.
தமிழர் நந்தா நல்ல சொன்னிங்கள், தம்பி தான் நஜிப்புக்கு கூஜா துக்குறாறே அவரிடம் சொல்லுலாம்
தமிழனுக்கு உதவினால் இந்த நிலை …..மானகட்ட சமுதாயம் …….
நல்ல உள்ளங்கள் நன்றி மறக்காது.சுயநலம் பாராமல் போராடிய உங்களை நிச்சயமாக மறக்க மாட்டோம்.உங்களுக்கும் நல்ல காலம் வரும் .
எப்படி முடியும்
எப்படி பாக்ஸ் மட்டும் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
போராட்டம் என்று வந்து விட்ட பிறகு ஏன் இத்தனை புகார்கள்.. இவை எல்லாம் நடக்கும் என்றுதானே சிறை சென்றீர்கள்.. உண்மையான போராட்டவாதி என்றால் என்ன நடந்தாலும் சகித்து கொள்ள வேண்டும்.. தனக்கு நடக்கும் கொடுமைகளை மக்களிடம் சொல்லி அனுதாபம் தேட முயற்சிப்பது வெட்க கேடான செயல்..
நல்லவன் நல்லாவே சொன்னார் ! இது 14வது பொது தேர்தலுக்கு இந்தியரின் வாக்குகளை சிதறடிக்க இப்பவே ஆரம்பித்து விட்டான் , மறுபடியும் இவன் தொல்லை தொடரும் ,
எது எப்படியோ உங்களால் பல பேர் நன்மை அடைந்துள்ளனர் என்பது வெளிச்சம்.
நாம சொன்னா எங்க கேட்கிறாங்க ! நல்லா இருந்த ஹிண்ட்ராப்-பை உடைச்சாச்சு , பதவி ஆசை யாரை விட்டது போங்க ! உங்க உடன் பிறப்பை பாருங்க…சமுதாயத்தை ‘நம்பிக்கை பாசாக்கடையில்’ ஒரு விலை பேசி வித்துட்டு, இப்போ பிரதமர் அலுவலகத்திலே ஒரு ‘பெரிய லெவல் ஆபீஸ் பாய்’ வேலையை பார்த்துகிட்டு ஜோரா இருக்கிறாரு…அந்த மாதிரி பிழைக்கத்தெரியாத ஆளா இருக்கீங்களே உதயா..இப்போ குத்துதே குடையுதேன்னா எப்படி உதயா? அன்றைக்கு 50,000 பேர் கே. எல். சி. சி. முன்னுக்கு மணிகணக்கா தொண்டை கிழிய கத்தின கூட்டத்துல நானும் ஒருவன் , அடிவாங்கிய பின்னரும் இந்தியர்களுக்காக உங்க பின்னால வந்த ஆயிரம் ஆயிரம் பேருல நானும் இருந்தேன் ! உயிரை பணயம் வத்து எத்தனை பேரு உள்ளே போனாங்க ! ஆனா ஹிண்ட்ராபை குடும்ப சொத்தா மாத்திட்டு , எங்களை ‘பூத்தா’ வா மாத்திட்டீங்களே….மனசு வலிக்குது உதயா. உங்களுக்காக அழுவதற்கு, இந்த சமுதாய இனியும் அடிவாங்கவோ தயாரா இல்லே …பயம் ஒரு காரணமே இல்லே….’நம்பிக்கை’ இல்லே ..அதான் ! சிறைக்குப் போனா சாதிக்கலாம்னு நினச்சு தப்பு கணக்கு போட்டது நீங்கதானே உதயா? வெளியே இருந்து சாதிக்க முடியாததை, எப்படி உள்ளே இருந்து சாதிக்க முடியும்…? இந்த கேள்விக்கு பதில் தெரிந்துதானே உள்ளே போனீங்க உதயா…? உங்களை யாரும் உள்ளே அனுப்பலே…இது உண்மை.நீங்களே உங்களின் சொந்த தேர்வின் காரணமாகத்தான், சொந்த விருப்பிலே , உள்ளே இருந்துகிட்டு சாதிக்கலாம்னு உள்ளே போனீங்க.இப்போ குத்துதே குடையுதேன்னா எப்படி உதயா ? ஐயா வேதா…உங்க உடன்பிறப்புக்கு அதரவா ஏதாவது சொல்லுப்பா, பெரிய இடத்துலே ‘ஆபீஸ் பாய்’ யா இருக்கீங்க…எதாவது பணலாம்லே ! ஏம்பா வேதா ..நான் சொல்லிகிட்டு இருக்கேன்…நீங்க என்னமோ..’அண்ணன் என்னடா தம்பி என்னடான்னு’ பாட்டு பாடிகிட்டு இருகீங்கா…இது நல்லால்லே சொல்லிட்டேன் !
சுப்ரா, கடவுள் துணை இருப்பார், ஆனா நம்ப மக்கள் துணை இருப்பார்களா என்றே கொஞ்சம் டௌட்டா இருக்கு….. சில ஆண்டுகளுக்கு முன், ஒரே போராட்டம் ஹிண்ட்ராப் தலைவர்களை விடிதலை செய் என்று, ஆனா நிலைமை இப்போது அப்படி இல்லை…
உங்கள் போராட்டத்தில் நிறைய பேர் சுகமாக வாழ்கின்றனர், களதில் இறங்கி கலக்கியவர் நீர், இப்போ உனக்கு கஷ்டம் வரும்போது, பொறுமை காக்கவேணுமாம்!!! ஆண்டவர் உதவி செய்வாராம், கொடுமை யோ கொடுமை.பார்த்தாய!!! ஹிந்து உலகமே ஒரு ஹிந்துக்கு ஏற்பட்ட நிலைமை. கவலை படாதே நண்பா நாங்கள் இருக்கோம் ஏதாவது செய்வோம் உமக்காக!!!
நம்மவர்கள் புத்தியும் ஹிந்துக்கள் புத்தியும் அதிக வேறுபாடில்லை– நாம் என்றுமே இந்துகளுக்கு உதவியதில்லை. ஜாதி புத்தியும் உயர்வு தாழ்வு புத்தியும் அதிகம்.
சிலரின் வார்தைகள் மிகவும் கொடுமையா இருக்கு,நீங்க எல்லாம் லாக்கப் தான் பொய் யிருபீங்க்கொ ஆனா ஜெயில் கு பொய் இருக்க மாடிங்க்கோ அதான் வெட்டி பேச்சி ஓவரா இருக்கு.கொடுமை சார் கொடுமை,போராட்ட வாதி என்ன நடக்கும் தெரியுமா அவருக்கும் பாசம் நேசம் வுண்டு.பிள்ளையை கானம் என்றால் கவலை/தேடல் இருக்கும்,ஆனால் கடத்தி விட்டனர்/கொடுமை நடக்குது/மான பங்கம் நடக்குது/கற்பழிப்பு நடக்குது என்று போன் வந்தா தெரிஞ்சும் ஆதரவு இல்லே காப்பாத்த அப்போ எப்படி இருக்கும் வுங்களுக்கு,சொறி வுங்களுக்கு தான் இன-மானம் கிடையாதே.
தமிழனுக்கு உதவினால் இந்த நிலை …..மானகட்ட சமுதாயம் …..
தமிழனே தமிழனை இளிப்பது மானம் கேட்ட சமுதாயம். தமிழன் இன்று முளிதுகொண்டது உதயா அவர்கள் செய்த போராட்டம்.
அனால் நன்றி மறந்த சமுதாயம் இந்த மானம்கெட்ட தமிழ் சமூகம்தான். ஒன்று நல்லது செய்யுங்கள் இல்லேயேல் வாய் மூடிகிட்டு அமைதியாக இருங்கள். உதயா உங்கள் போராட்டம் என்றும் ஓயாது. மக்கள் உங்கள் பக்கம்.
இது தமிழன் போராட்டம் ……குடுபதின் போராடம்மல்ல ..
இந்திய சமூகத்திக்க்கு ஏதாவது செய்ய வேண்டும்…. தனிப்பட்ட நபருக்கு கவனம் செலுத்த முடியாது
இங்கு கருத்து தெரிவித்தவர்களில் யாரவது முன் வந்து திரு.உதயவுக்குகாக பேச முடியுமா???குடும்பத்தை விட்டு,சிறையில் இருக்க தைரியம் உண்டா???அவர் நடத்திய போராட்டம் நமக்காக நடத்தியது…வெளியே இருந்து நீங்க என்ன சாதிதிர்கள்?,,,,நன்றி கெட்ட தமிழழனுக்கு உதவியது அவர் பிழை தான்…
நன்றி கெட்டே தமிழ் சமுதாயம்… பாவம் நீங்க..
V PAAVAM PADUTHUKIDDU ADIKKUM PUNNIYAM PULITHIKKIDDU ADIKKUM
பதவியை கேட்டான் கொடுத்தான் ,ஆனால் அங்கே
வேலைசெய்யும் பணியாளர்கள் எல்லோருக்கும் இவன்
நாடகம் தெரியும் அதனால் மதிக்கப் படவில்லை , எவ்வளவு
நாள் அங்கே மதிக்கப்படாமல் வேலை செய்ய முடியும் ,பணம் ,பதவி மட்டும் இருந்தால் போதுமா ,நீ கடையில் சாப்பிட்டு விட்டு கொடுக்கிற பணத்தை கடை ஊழியன்
வாங்க வில்லையென்றால் அந்த பணத்திற்கு மதிப்பு இருக்கா , பல பேரை ஜெயிலுக்கு அனுப்பி விட்டு நீ வெளிநாட்டுக்கு ஓடியவன் அங்கெ உன் 5 வருட விசா முடிந்தவுடன் மீண்டும் மலேசியாவிற்கு வரும் முன் பிரதமரிடம் பேதம் பேசமலா வந்தாய் , இந்தியர்கள் எல்லாம் உன் பின்னால் என்றாய் அவன் நம்பினான் உன்னை நாட்டின் உள்ளே விட்டான் , பதவியை உனக்கு கொடுத்து இந்தியர்களை சமாதனப் படுத்தினான் , நீ துணை மந்திரி யானது எங்களை அடமானம் வைத்து தானே என்பதை இந்தியன் புரிந்துகொண்டான் அதனால் பேசாம வீட்டுக்கு போ, போயி உன் மனைவி மக்களை முதலில் கவனி அப்புறம் இந்தியர்களை கவனிக்கலாம் நைனா.