சிரியாவில் வயிற்றில் வளரும் சிசுவை கொல்லும் கொடூரம்! வெற்றி பெற்றால் சிகரெட்டுகள் பரிசு

syria_dead_001சிரியாவில் உள்நாட்டு போருக்கு மத்தியில் அரங்கேறும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.

இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவர் டேவிட் நாட் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது, தாயின் கருவில் வளரும் சிசுவை சுட்டுக் கொன்றால் சிகரெட்டை பரிசாக பெற்றுக் கொள்ளலாம் என்ற போட்டி நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சிரியாவில் போர் நடைபெறும்போது அப்பாவி மக்கள் பலர் பரிதாபமாக பலியாகின்றனர்.

நான் இதுவரை 20 ஆண்டுகள் போர் நடக்கும் பகுதிகளில் மருத்துவராக பணியாற்றியுள்ளேன்.

ஆனால், இங்குதான் கர்ப்பிணி பெண்களை தாக்கி கொலை செய்வதை பார்க்கிறேன்.

மறைந்திருந்து தாக்கும் சிலர் அவர்களது பயிற்சிக்காக அப்பாவி பெண்களையும், குழந்தைகளையும் சுடுகின்றனர்.

இதில் மிக கொடூரமாக கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் சிசுவை சுட்டு கொல்பவர்களுக்கு சிகரெட்டுகள் வழங்கப்படும் போட்டியும் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.