சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்தில் நுழைவு வரி

thailandபாங்காக்: தாய்லாந்தில், சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு வரி திட்டம், அடுத்த ஆண்டு துவக்கத்தில் அமல்படுத்தப்படுகிறது.

தெற்காசியாவில், அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய நாடு தாய்லாந்து. கேளிக்கை விடுதிகள் நிறைந்த நாடு என்பதால், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

இதுவரை, சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் ஏதும் விதிக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை அதிகரிக்கவும், அவர்களுக்கு இலவச மருத்துவ உதவி அளிக்கவும், நுழைவு வரி திட்டம், வரும், ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இதற்கு, அந்நாட்டின் சுகாதாரத் துறை, போலீஸ் துறை, சுற்றுலா துறை உள்ளிட்டவை அனுமதியளித்துள்ளன. இதன்படி, தாய்லாந்து எல்லையில் நுழைந்தாலே, RM3.50 நுழைவு வரி கட்ட வேண்டும். மூன்று நாட்களுக்கு மேல் தங்கும் சுற்றுலா பயணிகளிடம், ஒருநாளைக்கு, RM55 வீதம் வரி வசூலிக்கப்பட உள்ளது.