அல்காய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனைப் பிடிக்க உதவிய பாகிஸ்தான் மருத்துவர் ஷகீல் அஃப்ரிதியின் கைது நியாயமற்றது. அவரை உடனடியாக விடுவிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனைப் பிடிக்க அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அமைப்புக்கு டாக்டர் அஃப்ரிதி உதவி செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி ஒசாமா கொல்லப்பட்ட உடன், அஃப்ரிதிக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி பாகிஸ்தான் கைது செய்து சிறையில் அடைத்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை செய்தித்தொடர்பாளர் மேரி ஹர்ஃப், ஷகீல் அஃப்ரிதியின் கைது நியாயமற்றது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்றார்.