சிரியாவின் ரசாயன ஆயுத விவகாரம்: அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க மறுத்தது நார்வே

syria chemicalஅமெரிக்காவும் ரஷியாவும் இணைந்து சிரியாவின் ரசாயன ஆயுத தடுப்பு பிரச்சனை குறித்து ஒரு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தின் படி சிரியாவும் ரசாயன ஆயுதங்கள் அனைத்தையும் ஒழிக்க உடன்பட்டது.

ரசாயன ஆயுத தடுப்பு அமைப்பு (ஓ.பி.சி.டபிள்யூ) சார்பில், சிரியா தனது அணு ஆயுதங்களை அடியோடு அழிப்பதற்கான விளக்கத் திட்ட அட்டவணையை அறிவித்திருந்தது. அதில், நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஆயுதங்களை அழிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில்  சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அழிக்க உதவியளிக்குமாறு அமெரிக்கா நார்வேயிடம் கேட்டுக் கொண்டது. ஆனால் தொடர்புடைய பணியாளர் மற்றும் சாதனங்கள் இல்லை என்ற காரணத்தினால் நார்வே அரசு இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

மேலும் ரஷிய-அமெரிக்க ஒப்பந்தப்படி, சிரியா அனைத்து ரசாயன ஆயுதங்களையும் அடுத்த ஆண்டு முதற்பாதிக்குள் அழித்துவிட வேண்டும் என்பது இலக்கு. அதனடிப்படையில், ரசாயன ஆயுத தடுப்பு அமைப்பு  ஓ.பி.சி.டபிள்யூ நடவடிக்கை எடுத்து வருகிறது.