மலேசியாகினி நாளிதழ் வெளியிடுவதற்கான உரிமம் வழங்குமாறு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மலேசிய உள்துறை அமைச்சுக்கு விடுத்திருந்த உதரவுக்கு எதிராக மலேசிய அரசாங்கமும் உள்துறை அமைச்சும் செய்திருந்த மேல்முறையீட்டை இன்று செவிமடுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏகமனதாகத் தள்ளுபடி செய்தது.
“நாங்கள் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்”, என்று மேல்முறையீட்டு நீதிமன்ற மூவர் அமைவின் தலைவர் அலிஸாதுல் காயர் ஓத்மான் இன்று பின்னேரத்தில் வழங்கிய தீர்ப்பில்
“ஆகவே, நாங்கள் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்கிறோம்” என்று அவர் கூறினார்.
எம்கினி டோட்கோமிற்கு செலவுத் தொகையாக ரிம5,000 வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து மேலிடத்து உத்தரவுக்குக் காத்திருக்கப் போவதாக அரசு தரப்பு வழக்குரைஞர் நோர்ஹிசாம் கூறினார்.
நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப மலேசியகினி உரிமத்திற்கு மீண்டும் மனுச் செய்யலாம் என்று மலேசியாகினியின் வழக்குரைஞர் கே. ஷன்முகா கூறினார்.
வாழ்த்துக்கள்
உண்மைக்கு கிடைத்த வெற்றி.நேர்மையான நீதிபதிகள் வாழ்க.
வாழ்த்துக்கள் உண்மைக்கும் ,நேர்மைக்கும் கிடைத்த வெற்றி .
நீதியரசர்களில் மனசாட்சி உள்ளவர்களும் இருக்கிறார்களே!!
இதைப் பார்த்தாவது மற்ற நீதியரசர்கள் திருந்தட்டும்.
மனசாட்சியுடன் தீர்ப்பளித்த நீதியரசர்களுக்கு நன்றி, நன்றி, வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள்
நீதியரசர்களில் மனசாட்சி உள்ளவர்களும் இருக்கிறார்களே!!
இதைப் பார்த்தாவது மற்ற நீதியரசர்கள் திருந்தட்டும்.
மனசாட்சியுடன் தீர்ப்பளித்த நீதியரசர்களுக்கு நன்றி, நன்றி, வாழ்த்துகள்.உண்மைக்கும் ,நேர்மைக்கும் கிடைத்த வெற்றி .வாழ்த்துக்கள்