கடலுக்கு அடியில் இரண்டு கண்டங்களையும் இணைக்கும் குகை ரயில் திட்டத்தை துருக்கி அரசு தொடங்கியுள்ளது.
துருக்கி நாட்டின் பிரதான நுழைவாயில் பகுதியாக விளக்கும் பாஸ்பரஸ் வளைகுடா பகுதியில் இரண்டு கண்டங்களையும் இணைக்கும் ரயில் பாதை தொடங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 13.6 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த பாதையின் ஒரு பகுதி போஸ்போரஸ் வளைகுடாவில் கடல்மட்டத்தில் இருந்து 200 அடி ஆழத்தில் அமைக்கப்படுகின்றது.
மூன்று பில்லியன் யூரோக்கள் திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், இஸ்லாமிய அரசின் முக்கிய திட்டங்களுள் ஒன்றாகும்.
இந்நிலையில் இதன் தொடக்க விழாவையும், நவீன துருக்கியின் 90வது ஆண்டு விழா நிறைவையும் இணைத்து விழா கொண்டாடப்படும் என அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் பினாலி இல்டிரிம் தெரிவித்துள்ளார்.
சுரங்க ரயில்பாதையுடன் மர்மரே திட்டம் எனப்படும் இந்தத் திட்டத்தில் ஐரோப்பியா மற்றும் ஆசியா ஆகிய இரண்டு கண்டங்களையும் தற்போது இணைக்கும் புறநகர் ரயில்பாதைகளின் 76 கி.மீ தூரத்தை மேம்படுத்தும் திட்டமும் அடங்கியுள்ளது.
கடந்த 1860களில் ஓட்டோமான் சுல்தான் அப்துல் மெட்ஜித்தின் எண்ணத்தில் உதித்த இந்தத் திட்டத்தை நிறைவேற்றப் போதுமான தொழில்நுட்பங்கள் அந்தக் காலத்தில் இல்லாததினால் அவரால் இதனை செயல்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் இந்தத் திட்டத்திற்கு துருக்கியின் பிரதமரான ரிசெப் தயிப் எர்டோகன் கடந்த 2004ஆம் ஆண்டில் புத்துயிர் அளித்தார்.
இத்துடன் 16 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தலைநகருக்கு மூன்றாவதாக ஒரு விமான நிலையம், சர்வதேச நீர்வழிப் போக்குவரத்தை எளிதாக்கும் வண்ணம் பாஸ்பரஸ் வளைகுடாவிற்கும் மற்றொரு கால்வாய்க்கும் இடையிலான மூன்றாவது பாலம் போன்றவையும் இந்த மெகாத் திட்டத்தில் அடங்கும்.
இரண்டு மில்லியன் மக்கள் நெரிசல் நிறைந்த இரண்டு பாலங்கள் வழியே கடந்து செல்லவேண்டியிருக்கும்.
துருக்கி பற்றி முக்கியமாக கூர வேண்டுமானால் எந்த ஒரு இயற்கை வளமில்லாத நாடு, அதே நேரத்தில் உலக வங்கியில் கடன் படாத நாடு.
துருக்கியில் நகரம் முதல் குக் கிராமம் வரை பிரயாணம் செய்து இருகின்றேன் ….ஒரு பிச்சைகாரனை காணமுடியவில்லை ..எல்லோரும் எதோ தொழில் செய்து பணம் சம்பதிகின்ரர்கள் …சிறிய கிராமங்களில் கூட euro கொடுத்து பொருட்கள் வாங்கலாம் ..தவிர மிகவும் பாதுகாப்பான நாடு ..இதனாலேயே ..லட்சச்சகணக்கில் உல்லாச பிரயாணிகள் வருகின்றார்கள் இங்கு ..கூடவே எங்கும் சுத்தம்
துருக்கி ஒரு ஆச்சர்யம்! ஐரோப்பா நாடுகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிகின்றன, ஆனால் துருக்கியோ முன்னேற்ற பாதையில்.