பிரிட்டன் முஸ்லிம் தலைவர், அமெரிக்கருக்கு மரண தண்டனை

Bangladeshபோர்க்குற்ற வழக்கில் பிரிட்டன் முஸ்லிம் தலைவர் மற்றும் அமெரிக்கருக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

கடந்த 1971ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசத்தில் விடுதலைப் போர் நடைபெற்றது. இப்போரின்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது டாக்காவில் உள்ள சர்வதேச குற்றத் தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இவ்வழக்கில் சர்வதேச குற்றத் தீர்ப்பாய நீதிபதி ஒபைதுல் ஹசன் அளித்த தீர்ப்பில், அல்-பதூர் இயக்க தலைவர்கள் அஷ்ரபுஸ்ஸமான் கான் (65), செüத்ரி மியூனுதீன் (65) ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

இவர்கள் இருவரும் 1971ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப்போரின் போது, 9 டாக்கா பல்கலைக் கழக பேராசிரியர்கள், 6 பத்திரிகையாளர்கள் உள்பட 18 பேரை கொலை செய்ததாக டாக்கா சர்வதேச குற்றத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் இந்த இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிபதி மரண தண்டனை விதித்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட செüத்ரி மியூனுதீன் தற்போது லண்டனிலும், அஷ்ரபுஸ்ஸமான் கான் நியூயார்க் நகரிலும் வசித்து வருகிறார்கள்.

மியூனுதீன் கூறும்போது,தான் எந்தவித போர்க்குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று மறுத்தார். ஆனால் அஷ்ரபுஸ்ஸமான் கான் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றி கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.