எம்பி: செந்தூல் காங்கிரீட் ஆலையின் பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட வேண்டும்

tian23செந்தூலில் உள்ள சிமிண்டையும் காங்க்ரீட்டையும் கலக்கும் ஆலையை மூடி அதனால் சுகாதாரக் கேடு இல்லை என்பது உறுதியான பின்னரே திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுமானப் பகுதிகளுக்கு அனுப்புவதற்காக காங்க்ரீட்டை உருவாக்கிக் கொடுக்கும் அந்த ஆலையிலிருந்து வெளிப்படும் சிறுசிறு துகள்கள் உடல்நலனுக்குத் தீங்கு செய்யக்கூடியவை என பத்து எம்பி தியான் சுவா கூறினார்.

“ஆலைக்குச் சென்றுவரும் கனரக வாகனங்களால் குடியிருப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம்”, என்றும் தியான் சுவா குறிப்பிட்டார்.

 

TAGS: