ஆளில்லா விமானத்தை தாக்கி அழிக்கும் அதி நவீன தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் ராணுவம் வடிவமைத்துள்ளது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை ஆளில்லா விமானங்களின் மூலம் அமெரிக்கா அழித்து வருகிறது.
இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பலியாகி வருவதால், பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
எனினும் பாகிஸ்தானின் பேச்சை கண்டுகொள்ளாத அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
கடந்த வாரம் நடந்த தாக்குதலில் தலிபான்களின் தலைவர் மெக்சூத் கொல்லப்பட்டார்.
தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கவே, அமெரிக்கா முயல்கிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
இதற்கிடையே ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் சாதனத்தை பாகிஸ்தான் ராணுவம் வடிவமைத்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பகவல்பூர் என்ற இடத்தில் நேற்று நடந்த ராணுவ பயிற்சி நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷரீப் கலந்து கொண்டார்.
அவரது முன்னிலையில் ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பாகிஸ்தானின் இந்த ஒத்திகை நிகழ்ச்சி அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை தாக்கி அழிப்பதற்கான முயற்சி என ராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.