பாகிஸ்தானின் தலிபான்கள் தமது புதிய தலைவராக முல்லா ஃபசுல்லா அவர்களை தெரிவு செய்துள்ளனர்.
பள்ளிக்கூட மாணவி மலாலா யூசுப்பை சுட்டவர்கள் இவரது போராளிகள்தான்.
கடந்த வெள்ளியன்று அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான்களின் தலைவர் ஹக்கிமுல்லா மெஃசுட் அவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கின் தளபதியான முல்லா ஃபசுல்லா அவர்கள், 6 வருடங்களுக்கு முன்னதாக , வானொலி மூலம் கடும்போக்கு இஸ்லாத்தை வலியுறுத்தி வந்ததால், ரேடியோ முல்லா என்று அழைக்கப்பட்டவராவார்.
பழங்குடியினப் பகுதிக்கு வெளியே இருந்து பாகிஸ்தான் தலிபான்களுக்கு ஒரு தலைவர் வருவது இதுதான் முதல் தடவை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். -BBC


























மனிதாபிமானம் இல்லா இவனின் நாட்களும் எண்ணபட்டு விட்டன.அல்லாஹ்வின் பெயரைச்சொல்லிக்கொண்டு பிற உயிர்களை கொலை செய்யும் மிருகங்கள்.