உளவு நடவடிக்கைகளுக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம்

un-logo1உலக நாடுகளை உளவு பார்க்கும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தீர்மானம் ஒன்று ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்டது.

ஜேர்மன் மற்றும் பிரேசில் நாடுகள் இந்த தீர்மானத்தை வழங்கின.

தீர்மானத்தை அறிமுகப்படுத்தும் போது பேசிய பிரேசில் தூதர் ஆண்டானியோ டி அகுவேர்(Antonio De Aguiar), தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மனிதனின் அடிப்படை சுதந்திரத்தைப் பறித்துவிட்டதாகக் கூறினார்.

மேலும் தனிமனித உரிமைகளை பறிக்கும் இதுபோன்ற உளவு நடவடிக்கைகளால் உண்மையான பேச்சுரிமை என்பது பறிபோய்விட்டது என பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூஸ்ஸெஃப்(Dilma Rousseff) தெரிவித்தார்.

இந்த தீர்மானம் மீதான விவாதம் நிறைவேற்றப்பட்ட பிறகு, வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.