அவுஸ்திரேலியாவில் பியர் பாட்டிலில் இந்து கடவுள்களின் உருவங்கள் அச்சிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அவுஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பியர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய பிள்ளையார், லக்ஷ்மி போன்ற தெய்வங்களின் உருவங்களை அச்சடித்திருந்தது.
இதனைக் கேள்விப்பட்ட அவுஸ்திரேலியா வாழ் இந்து மதத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இத்தகைய தெய்வ உருவங்களை மது பாட்டில்களின் மேல் வெளியிடுவது மிகவும் பொருத்தமற்ற செயலாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
அங்குள்ள இந்து மத யுனிவர்சல் சங்கத்தின் தலைவரான ராஜன் இதைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்துமதக் கடவுள்கள், கருத்துகள் மற்றும் குறியீடுகள் போன்றவற்றை வணிகப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துதல் கூடாது.
ஏனெனில், இந்த செய்கை இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எந்தவிதமான நம்பிக்கைக் குறியீடுகளும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
பிள்ளையார் மற்றும் லக்ஷ்மி போன்ற கடவுள்கள் இந்து மதத்தில் மிகவும் போற்றப்படுகின்றனர்.
இந்தத் தெய்வங்களை கோவில் சந்நிதிகளிலோ அல்லது வீட்டிலுள்ள இறைகூடங்களிலோ வைத்து வழிபட வேண்டுமே தவிர வணிகப் பேராசைக்காக பியர் பாட்டில் விற்பனைகளில் பயன்படுத்தக்கூடாது என்று ராஜன் கூறினார்.
தெய்வங்களின் உருவங்கள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள பியர் பாட்டில்களை அந்த மதுபான நிறுவனம் திரும்பப் பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது கடவுளுக்கே அடுக்காது. கடவுள் பெயரால் மதுபானங்களா?
வேண்டாம் மத தூவேசம்.
இதற்கு இந்தியர்களாகிய நாமும் ஒருகாரணம் நாம் செய்யும் வியாபாரத்தை விளம்பரம் செய்ய நாம் கடவுள் உருவப்படத்தை பயன்படுத்துகிறோம் அதன்பிறகு என்ன நடக்கிறது நாம் வாங்கிய பொருளை பயன்படுத்தி கடவுள் படம் பதித்த காலி பொட்டலத்தை வீசுகிறோம் இது எந்தவிதத்தில் ஞாயம் நமது கடவுளை நாம் முதலில்
மதிப்போம் நமது கடவுள் தொட்டு நமது சமயம் வரை எல்லோருக்கும் ஒரு கேளிகூத்தாகி விட்டது. இதற்கு நாம் உடனே தீர்வு காண வேண்டும்
11
Typed with Panini Kem
வேணும்னா இவனுக படத்தை மது பாட்டில்களின் மேல் அச்சடிகலமே!!!
முதலில் மது பாட்டில் வைத்து தெய்வ வழிபாடுகள் செய்வதை நிறுத்தவேண்டும் .
அன்புத்தமிழன் சொல்வதுபோல இந்திய வியாபாரிகள் மாறவேண்டும். தமிழ்நாட்டில் இந்த விசயத்தில் இன்னும் கேவலம். இவர்களை யார் கேட்பது? இந்து மதம் என்றால் எல்லாரும் மேயலாம் என்ற நிலை நிலயாகிப்போனதுதான் மிச்சம். ஆலயங்களில் நடக்கும் கூத்தை கேட்பாரில்லை. திருவிழாக்களுக்கு அவர்கள் வெளியிடும் திருவிழா பத்திரிகைகள் இந்து சமய தெய்வங்களை பெரிது பெரிதாக அச்சுப்போட்டு தெய்வங்களை கேவலப்படுத்தும் கைங்கரியத்தை யார் தட்டிக்கேட்பது? சில தமிழர் உணவகங்களில் அந்தப் பத்திரிகைகள் கழிவறைக்குப் பக்கத்தில் ஒட்டியிருக்கிறார்கள். நாமும் மாறவெண்டும். இந்து சமய பெயர்களை தங்களுடைய நிறுவனங்களுக்குக் கொண்டுள்ள சில நிறுவனங்கள் த்ங்களுடைய வெளியீட்டுப் பொருள்களான சூடம், சாம்பிராணி, நல்லெண்ணெய், விளக்குத் திரி போன்றவைகளுக்கு தெய்வப்படங்களை விளம்பரமாக பயன்படுத்தக்கூடாது. முடியுமா இவர்களால்.
இதுல ஏன்னா தப்பு இருக்கு ?