ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்கள் இடையிலான மோதல் போக்கு உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக இரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘எல்லாத் தரப்பினரும் தமக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து மதக்குழு வாதத்துக்கு எதிரான சிரியாவின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்’என்றும் வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாட் ஸாரிப் பிபிசியிடம் கூறினார்.
சில சன்னி முஸ்லிம் நாடுகள் ‘அச்சுறுத்தலை உருவாக்கும்’ நாடுகளாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிரியாவில் கிளர்ச்சி வெடித்தபோது, அதற்கு மதக்குழு வாதம் காரணமாக இருக்கவில்லை. ஆனால் இப்போது முஸ்லிம் மதக்குழுக்களிடையிலான மோதலாக சிரியா விவகாரம் உருவெடுத்துள்ளது.
ஷியா முஸ்லிம் நாடான இரான், சிரியாவின் அதிபர் அஸ்ஸத்துக்கு ஆதரவளிக்கிறது.
சிரியாவின் சன்னி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மற்றும் துருக்கி உள்ளிட்ட சுன்னி ஆதிக்க நாடுகளிடமிருந்து ஒத்துழைப்பை பெற்றுவருகின்றனர். -BBC
இவனிடமே ஒற்றுமை இல்லை!
இதிலே மற்ற மதத்தை குறை சொல்றான்…..
ஐயா அந்த வார்த்தை மிகவும் கொச்சையாக இருக்கிறது. சன்னி என்று எழுதுங்கள்
ஆண்டிபட்டிக்கும் அரசம்பட்டிக்கும் அல்லாஹ் ஒருவர்தானே ? எதுக்கு மோதல் ?? ஈரான் ஷியாவையும் – சவுதி அரேபியா சுன்னியையும் தழுவுவதாக தெரிகிறது . மலேசியா அந்த இரண்டு நாடுடனும் உறவு கொண்டுள்ளது. அப்படிஎன்றால் – அந்த இரண்டு முரணான மார்கத்தையும் மலேசியா வரவேற்கிறதா ?? மலேசியா யாருக்கு ஆதரவு ??