135 நாட்களாக கடலில் நீந்தி சாதனை படைத்த மனிதர்!

swim_135days_001இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் 135 நாட்களாக கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் கிளவுஸ்டர்ஷெயர் பகுதியில் உள்ள லெக்காம்டான் என்ற இடத்தை சேர்ந்தவர் சீன் கான்வே(வயது 32).

இவர் கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி, இங்கிலாந்தில் உள்ள லேண்ட் எண்ட் என்ற இடத்தில் இருந்து தனது நீச்சல் பயணத்தை தொடங்கினார்.

சுமார் 4 மாதங்கள் மிகவும் குளிரான இங்கிலாந்து கடல் பகுதியில் நீந்தி சென்று, சுமார் 1450 கிமீ தொலைவில் இருக்கும் ஜான் ஓ க்ரோட்ஸ் என்ற துறைமுகத்தை நேற்று வந்தடைந்தார். இதற்காக இவர் எடுத்து கொண்ட காலம் 135 நாட்கள்.

கடலில் நீந்தி வரும் போது, ஜெல்லி மீன்களின் தாக்குதல், கடல் நோய் பாதிப்பு, குளிர் என எதை பற்றியும் கவலைப்படாமல் அவர் இந்த சாதனையை செய்துள்ளார்.

இதுகுறித்து சீன் கான்வே கூறுகையில், இதற்கு முன்பு இதே பகுதியை சைக்கிளிலும், நடந்து சென்றும் பலர் இந்த சாதனையை செய்துள்ளனர்.

முதல் முறையாக இந்த பகுதியை கடலில் நீந்தி கடந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இவரது சாதனையை கின்னஸ் புத்தகம் பதிவு செய்ய மறுத்து விட்டது, இதற்கு கடும் குளிரின் காரணமாக கடலுக்கு வெளியே செலவிட்டுள்ளதே காரணமாகும்.

மேலும் பாதுகாப்பான நீச்சல் உடையும், காலில் எளிதில் நீந்தி செல்வதற்கான நீச்சல் ஷூவும் அணிந்திருந்தார் என்ற காரணத்துக்காகவும் சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.