ஆப்கானிஸ்தானில் கஞ்சாப் பயிர் விளைச்சல் இந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.
இந்த ஆண்டு விளைவிக்கப்பட்டுள்ள 5,500 டன் கஞ்சாப் பயிர் முன்பு 2007ம் ஆண்டின் கஞ்சாச் செடி விளைச்சலை விட அதிகமாகும். உலகின் ஹெராயின் போதைப்பொருள் தேவைக்குத் தேவைப்படும் அளவுக்கான விளைச்சல் இதுவாகும்.
ஆப்கானிஸ்தானிலிருந்து பெரும்பாலான வெளிநாட்டுத் துருப்புக்கள் அடுத்த ஆண்டு வெளியேறவுள்ள நிலை, மற்றும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தல் ஆகியவைகளால் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற சூழ்நிலையின் மத்தியில், அடுத்த ஆண்டு இந்த கஞ்சாப் பயிர் விளைச்சல் மீண்டும் அதிகரிக்கும் என்று காபூலில் உள்ள ஐ.நா மன்ற போதைப் பொருள் மற்றும் குற்றத்தடுப்பு அலுவலகத்தின் தலைவர் ஷான் லூக் லெமஹியூ கூறினார்.
ஆப்கானிஸ்தானின் அபின் பிரச்சினையை சமாளிக்க 10லிருந்து 15 ஆண்டுகள் பிடிக்கும் என்று அவர் கூறினார்.
இந்த கஞ்சாச் செடி பயிரிடுதல் பெரும்பாலும் ஹெல்மாண்ட் மாகாணத்திலேயே நடக்கிறது. இந்த மாகாணத்திலிருந்துதான் பிரிட்டிஷ் படையினர் விலகிச்செல்ல தயாராகி வருகின்றனர். -BBC