நஜிப் சிறீ லங்காவுக்கு சென்று விட்டார்

 

najibஇன்று பிற்பகல் மணி 2.00 அளவில் பிரதமர் நஜி ரசாக் மலேசிய மக்களின், குறிப்பாக தமிழர்களின், வேண்டுகோளை துச்சமாக்கி விட்டு காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக சிறீ லங்காவுக்கு புறப்பட்டு சென்றார்.

சிறீ லங்காவில் நவமபர் 15 – 17 தேதிகளில் நடைபெறும் அம்மாநாட்டில் பங்கேற்கும் மலேசிய குழுவிற்கு நஜிப் தலைமை ஏற்கிறார்.

பாரிசான் பங்காளிக் கட்சியான மஇகாவின் தலைவர் ஜி. பழனிவேல் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நஜிப் சிறீ லங்காவுக்கு போவது குறித்து அவரிடம் பேசப் போவதாகக் கூறியிருந்தார்!