நஜிப் மீதான நம்பிக்கை ஸ்ரீலங்கா பயணத்தால் நொறுங்கியது

1-sivaபிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  தேர்தலுக்கு-பிந்திய ஞாபகமறதி என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்,  அதனால்தான் அவர்,  தாம் எல்லா  மலேசியர்களுக்குமான பிரதமர் என்பதை மறந்து போய் விடுகிறார் என வணிகர் ஒருவர் ஆத்திரமாகக் குறிப்பிட்டார்.

காமன்வெல்த் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளும்  நஜிப்பின்  முடிவு குறித்து கருத்துரைத்தபோது ஜோகூர் இந்திய வர்த்தகச் சங்க(ஜிபா)த் தலைவர் பி.சிவகுமார் இவ்வாறு கூறினார்.

அவர், மஇகா தலைவர் ஜி.பழனிவேலையும் சாடினார்.  இவ்விவகாரம் தொடர்பில் அவர் பதவி விலக வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.

“ஸ்ரீலங்காவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்……அது ஒரு இனஒழிப்புச் செயல். நஜிப் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்..

“தேர்தலுக்குமுன் தம்மீது நம்பிக்கை வைக்குமாறு இந்தியர்களை திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்ட பிரதமருக்கு பொருளாதாரம் முக்கியமாகப் போய்விட்டது”, என்று சிவகுமார் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

TAGS: