யுத்த குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் எகிப்து இராணுவம்

egypt_008எகிப்து இராணுவத்தினர் மற்றும் இடைக்கால அரசாங்கம் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக பிரித்தானியாவிலுள்ள சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்

மொஹமட் மூர்சி பதவி கவிழக்கப்பட்ட பின்னர் கொலை. துன்புறுத்தல் மற்றும் மக்கள் காணாமல் போதல் போன்ற மனிதாபினமானத்திற்கு எதிரான நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தாம் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக குறித்த சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

முக்கிய சந்தேகநபர்களின் பட்டியலில் எகிப்து இராணுவத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.