ரஷ்யாவால் முடியாதது இந்தியாவால் முடியுமா? பாகிஸ்தான்

ins_vikramathithya_002மிகப்பெரிய பொருட்செலவில் சீரமைக்கப்பட்ட “ஜ.என்.எஸ் விக்ரமாதித்யா” என்ற விமானம் தாங்கி கப்பலை இந்திய கடற்படையினரால் பராமரிக்க முடியுமா என்று பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.

ரஷ்ய கடற்படையில் பாகு என்ற பெயரில் 1987ல் சேர்க்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் பின்னர் அட்மிரல் கார்ஸ்கோவ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1995ல் இந்த கப்பல், ரஷ்ய கடற்படையிலிருந்து ஓரம் கட்டப்பட்டது. நட்பு நாடு என்ற அடிப்படையிலும், நம் ராணுவத்துக்கு தேவையான பெரும்பாலான ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியதாலும் அந்த கப்பலை, இந்தியாவுக்கு இலவசமாக வழங்குவதாக ரஷ்யா அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா நேற்று சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்து இந்த திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்.

ரஷ்யாவால் கூட பராமரிக்கமுடியாத இந்த கப்பலை இந்தியாவால் பராமரிக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான். இந்த முழு திட்டமும் ஒரு காலம் கடந்த சிந்தனை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் தன்னை மகத்தான சக்தி என்று காட்டிக் கொள்வதற்காக இவ்வாறு செய்யும் இந்தியா, இதற்கு பதிலாக பஞ்சத்தில் வாடும் மக்களுக்கு செலவு செய்தால் அதுவே மிகப்பெரிய காரியம் என்று தெரிவித்துள்ளது.