அவசர தகவல்.2013 UPSR பெற்றோர்கள் கவனத்திற்கு
2014 கல்வி ஆண்டு முழு உதவி ஆஸ்ரம பள்ளிக்கு மனு செய்யுங்கள் .
நாட்டில் SBP SEKOLAH BANTUAN PENUH என்ற ஒன்று உண்டு. UPSR -இல் 7 A பெற்ற மாணவர்கள் இந்த முழு உதவி ஆஸ்ரம பள்ளிக்கு மனு செய்யலாம்.இதையும்.நாட்டில் ஆண்டு தோறும் 8,000 மாணவர்கள் இந்த வசதியில் பாரம் ஒன்றில் துவங்கி பாரம் 5 வரை இலவசமாக் படிக்கலாம்.
இப்போது 2014 ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
UPSR வெளியான கடந்த 14.11.2013 லிருந்து 27 நாளுக்குள் மனு செய்ய வேண்டும். தொடர்புக்கு 03-83217400 அல்லது அருகில் இருக்கும் மாநில /மாவட்ட கல்வி இலாகாவில் மனு செய்யலாம். அல்லது www.moe.gov.my ( E -TAWARAN எனும் ) முகவரி வழியும் மனு செய்யலாம். SBP பள்ளி விபரங்கள் இதில் கிடைக்கும் முதல் அல்லது இரண்டு முறை நிராகரிக்கும் வாய்ப்பு உண்டு கால தவணைக்கு பிறகு இரண்டு வாரத்திற்குள் முறையீட்டு வழி மீண்டும் மனு செய்யலாம்.
இதை e rayuan வழியும் செய்யலாம். இது 10/12/2013 முதல் 24/12/2013 வரை நடப்பில் இருக்கும்.
மாணவர்கள் நாட்டில் எப்பள்ளிக்கும் அனுப்பபடுவர் என்பதை மனதில் வைத்து பிள்ளைகளை தயார் செய்து கொள்ளவும். முக நூல் தோழர்கள் இதை காபி செய்து நமது பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பிரசாரம் செய்யவும். இது என் முக நூல் Pon Rangan எனும் முகவரி வழி பெறலாம்.
நன்று நல்ல தகவல்
இப்பள்ளிக்கும் (எஸ் பி பி) மற்ற இடைநிலைப்பள்ளிக்கும் உள்ள வேறு பாடு என்ன என்பதை யாரேனும் சற்று விளக்கவும்…
எஸ் பி பி பள்ளிக்கு அனுப்புவதனால் (குறிப்பாக நமது இந்திய மாணவர்களுக்கு) என்ன நன்மைகள் அல்லது சலுகைகள் உள்ளன?
இப்பள்ளிகளுக்கும் (எம் ஆர் எஸ் எம்) மாரா இடைநிலை அறிவியல் கல்லூரிக்கும் உள்ள வேறுபாடு என்னவோ????
நன்று இதை முகப்பு செய்திக்கு அனுப்புங்கள்..கல்வி தர்மம் தலை காக்கும் தக்க தருணத்தில் உயிர் காக்கும்.நன்றி.
கல்வி துணை அமைச்சர் கமலநாதன் சரியான பதில் தருவார்…நம்ப தந்தால் அவர் போட்டு உள்ளப்புவார். நம்ப புள்ளைங்க தலை தெறிக்க ஓடி ஒளிந்துபுடுவாங்க !
எஸ் பி பி பள்ளியில் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் இடம் உண்டோ? அல்லது தேசியப் பள்ளியிலிருந்து வந்த மாணவர்களுக்கு மட்டுமே இப்பள்ளியில் இடமா?
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்பள்ளியில் சேர்வதற்கு கல்வி அமைச்சின் கொள்கை யாது??
நன்கு விசாரித்து முடிவெடுங்கள்…அல்லது அனுபவம் உள்லோரோடு ஆலோசித்து பிறகு நல்ல முடிவெடுங்கள்…
anonymous 20/11 கேள்விக்கு பதில்..
1).உண்டு பல தமிழ் மாணவர்கள் படிக்கிறார்கள் பெரும்பால்லும் வசதி உள்ள தலைவர்கள் /ஆசிரியர்கள் பிள்ளைகள் கமுக்கமாக சேர்கிறார்கள்.
2) எல்லாரும் சேரலாம். 3)தொலை பேசி எண் உண்டு நேரிடையாக விபரம் அறியலாம்…..நம்ப அனுபவ ஆள்கள் எல்லாம் ஊமை குஞ்சுகள் வாய் திறக்க மாட்டார்கள்…தலைமை ஆசிரியர்கள் கூட இது பத்தி பேசுவது இல்லை.SBP ஏசுமாம்.
அன்பர் பொன் ரங்கன் அவர்களே,
மன்னிக்கவும்… தமிழ் மாணவர்கள் படிக்கிறார்கள் ஆனால் அவர்கள் தேசியப் பள்ளியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும்.
கல்வி அமைச்சின் கொள்கையில் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்கள் (sekolah rendah kebangsaan) என்று!!
மனம் குமுறுகிறது.. இதை அறிந்த நமது இந்திய ஆளும் கட்சி தலைவர்கள் கூட வாயில் கொழுக்கட்டை வைத்திருக்கிறார்கள்…
ராமசாமி சார் இல்லை ஐயா நான் தமிழ் பள்ளி மாணவர்களை சேர்த்துள்ளேன். ஒன்றும் பிரச்னை இல்லை முடியும் நாம் முயல்வது இல்லை .நன்றி. வணக்கம்
நன்று.
மகிழம்பூ கலை நிகழ்ச்சி 11/12/2013
மீண்டும் தமிழ் பள்ளிக்கு நம் பிள்ளைகளை சேர்க்கும் நோக்கத்தில் “மகிழம்பூ” எனும் கலை நிகழ்ச்சி அம்பாங் டதோ அமாட் ரஜாலி மண்டபத்தில் 11/12//2013 இரவு 7 மணி அளவில் நடைபெறும்.
எம் பி எ ஜெ துணை யாங் டி பெர்டுவா அவர்கள் தலைமையில் உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் இடம் பெரும். இக்கலை நிகழ்ச்சிக்கு அம்பாங் வட்டார மக்கள் திரளாக வந்து கலந்து மகிழும் படி கேட்டுகொள்கிறோம்.
கல்வி ஆண்டு 2014 தமிழ் பள்ளிக்கு செல்லும் முதலாம் ஆண்டு மாணவ மணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்பதால் 2014 தமிழ்ப்பள்ளியில் பதிந்துககொண்டுள்ளவர்கள் தவறாமல் கலந்து பயன் பெற வேண்டுகிறோம்.
தமிழ்ப்பள்ளியில் பதிந்து கொண்ட பிறந்த சூரா உறுதி நகலுடன் மாணவர்களையும் அழைத்து வருவது அவசியமாகும். அம்பாங் தமிழ்ப்பள்ளி புதிய மாணவர்களுக்கு பதிவுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்படும்.
நன்றி ஏற்பாட்டு குழுவினர்.
நன்று
நாங்கள் மனு செய்கிறோம் ,அதை தூக்கி கொண்டு போயி வடிகட்டி மலாயிக்காரனுக்கு கொடுத்து விடுவார்கள் ,என்னாத ……..மனு கினு
மோகன், இது போன்ற எதிர்மறைப் பேச்சுக்களைத் தவிருங்கள். நமது மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பது உண்மை. குறைவாக இருக்கலாம். வருங்காலங்களில் நிறைவாக இருக்கும். கொஞ்சம் நம்பிக்கை வைப்போம். நீங்கள் நாலு பேருக்கு நல்லதைச் சொன்னால் நல்லது நடக்கும். நல்லது இருக்கும் போது ஏன் இந்த அவநம்பிக்கை?
BOTHIVARMAR அவர்களே ,யாரு மீது நம்பிக்கை வைப்பது ?கடவுள் மீதா ?அல்லது இந்த நாறிப்போன இன வெறி பிடித்த அம்னோ அரசாங்கத்தில் மீதா ?அல்லது போராடி காலை கைய பிடித்து இடம் வாங்குவது தமிழனின் தலை எழுத்தா?கிடைக்கும் ஆனால் கிடைக்காது தமிழனுக்கு ,கிடைக்காது அனால் கிடைக்கும் மலாய்க்கார மொட்டையனுக்கு .தன்னைத்தானே நம்பினாலே ஒன்னும் நடக்க மாட்டிக்கிது ,இதுலே வேற அவனம்பிக்கையாம் ,,பேசாமல் யானையின் தும்பிக்கையை எடுத்து விற்றாலே நாலு காசு சேரும் அதுதான் நம்பிக்கை ,! சொன்னான்லே போங்கள் விழாவில் நம்பிக்கை என்று ,இப்ப நம்பிக்கை நக்கிகிட்டு இலங்கைக்கு போச்சி ..
நண்பர்களே! முடிந்தவரை இந்த செய்திகளை உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் கொண்டு செல்லுங்கள். நமது பிள்ளைகளுக்குக் கல்வி முக்கியம். மற்றவர்களைக் குற்றம் சொல்ல வேண்டிய நேரம் இது வல்ல!
மோகன் போன்ற வெறும் கை ஒப்பாரிகள் மூடிகிட்டு இருந்தால் போதும்.
கலை நிகழ்ச்சி நோக்கம் நாட்டில் தமிழ், தமிழர் சார்ந்த இயக்கங்கள் கண்ட கண்ட கேளிக்கை கலை நிகழ்சிகளுக்கு காசையும் நேரத்தையும் வீணாக்காமல் இது போன்ற தமிழ்ப்பள்ளி மாணவர் சேர்க்கை திட்ட செலவுக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நிதிக்கும் நல்ல அர்த்தமுள நிகழ்வுகளுக்கு ஆதரவு தந்தால் நன்மை தரும். ஏறப்பாடாளர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மோகன் போன்ற வெறும் கை ஒப்பாரிகள் முடியாது போனால் மூடிகிட்டு இருப்பது நன்று.
மோகன் அவர்களே ஒன்றும் இல்லாத king of the king இளைய ராஜ கார்திக் ராஜா காலிகள் ஆட்ட கலை நிகழ்ச்சிக்கு 400.300,200,100,70 என்று டிக்கட் விலையில் கலை நிகழ்ச்சி போட்டு இந்நாட்டு தமிழர்களிடம் பணத்தை அடிக்க ஒரு கூட்டம் வந்துள்ளது எப்படியும் 50 மில்லியன் அதுங்க திட்டம் பொய் கொட பிடிங்க எதும் பிச்சை கிடைக்கும்!
நம்ப நாடு நம் தமிழர்கள் நல்ல நோக்கத்திற்கு நடத்தும் நிகழ்வுகள் நன்மைக்கே இன்னும் நாமாகவே கரணம் பாய வெண்டி உள்ளது.ஏன் உங்கள் பின் அடுப்பு எரியுது ? நானும் உங்கள் அடவாடிதனத்தை கவனித்து கொண்டுதான் உள்ளோம். அடக்கம் வேண்டும் அல்லது ……சரி படாது.
Dato Ravi ,உங்கள் பெயர் அழகா இருக்கு ,Dato என்ற பெயர் உங்களுக்கு பிறவிலே வந்ததா ,இல்ல பணம் கொடுத்து வாங்கிநீரா ,இல்ல உண்மையான சேவைக்கு கிடைத்ததா ?? சரி அதை விடுங்கள் ,ஏன் ஐயா ,எலிக்கும் பூனைக்கும் கல்யாணம் பண்ணி பார்கீரீர் ?இளைய ராஜ இதில் நுழைய வேண்டிய அவசியம் இல்ல ,,அது பொழுது போக்கு ,பொழுது போக்கையும் கல்வியையும் ஒப்பிட்டு பார்க்காதீர் .தமிழர்களுக்கு இந்த bn அரசாங்கம் ஆப்பு அடித்து கொண்டு வருகிறான் .நம் மாணவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் ,ஏன் நம் பிள்ளைகளை அரசாங்கம் ஒதுக்கி பார்க்கிறது ?எந்த காலேஜிக்கு எழுதி போட்டாலும் சிறந்த மாணவர்களுக்கு இடம் அளிக்க மாட்டிக்கிரார்கள் .என்னை எதிர்க்கிற உங்க மாதிரி ஆளுங்க போயி அரசாங்கத்தை எதிருங்க ,,நம்ம ஆளுங்க சம்மந்த பட்டத்தை மட்டும் பேசுங்க ,சம்மந்தம் இல்லாததை பேசி குட்டைய கொலப்பாதேங்க ,,இளையராவுக்கும் மலேசிய upsr ஆஸ்ரம பள்ளிக்கும் சம்மந்தம் இல்ல .சரி,,இளையராஜா யாரு தமிழ் மொழியை உலக அரங்கிற்று கொண்டு சென்று சிம்பொனி இசையில் தமிழனை உலகி no 1 ஆகா உயர்த்தியவர் ,,,கோவிலில் போயி சரஸ்வதி பூஜை நடதுறேங்க்கள ,அந்த சரஸ்வதி சாமிதான் கல்வி திட்டத்தையும் ,இசை கலை திட்டத்தையும் உருவாக்கி வச்சாங்க ,,,இதுல எதை பற்றி பேசவேண்டுமோ ,அதை பற்றிதான் பேச வேண்டும் ..இளையராவின் இசையில் டிக்கேட்டின் விலை உயர்வாக இருந்தால் போயி கோர்ட்டுல கேச போடுங்க ,அந்த சமயதில் கொட்டில் நான் வந்து சொல்லுகிறேன் ,”ticket rm 500 மலிவுதான் என்று “எனக்கு அடக்கம் இருக்கு ,எப்ப உப்யோகிக்கொனோம் என்று எனக்கு தெரியும் .எல்லாமே சரிப்படும் ,,ஏன்னா நான் உங்க மாதிரி Dato ரவி கிடையாது ,,மாணிக் மோகன்
நான் கை ஒப்பாரிதான் ,நீங்கள் ஊளை விடாமல் இருந்தால் சரி நண்பரே
மாண்புமிகு Dato Ravi ,அவர்களே நான் மூடிகிட்டுதான் இருக்கேன் ,நீங்கள் என்ன தொறந்தா போட்டு இருக்கேங்க ?
அன்பர்களே,
உங்கள் கருத்துக்களை சொல்வது உங்களின் உரிமை. ஆனால், பண்பான முறையில் சொல்வதுதான் அனைவருக்கும் நல்லது.
இன்றைய சூழ்நிலையில் நாம் இழந்து கொண்டிருக்கும் நமது உரிமைகளை எப்படி தற்காத்துக்கொள்வது, அதற்காக எப்படி துணிவுடன் போராடுவதே மிக முக்கியம். எமார்ந்தால் கோமணம் கூட மிஞ்சாது!!!!!
அனைத்து இந்தியர்களும் ஒன்றிணைவோம்….
நல்லவங்க சொன்ன நாடு கேட்கும்
, தமிழ் உணர்வும் தமிழச்சிக்கு, பிறந்த ஒஉவொரு அம்பாங் தமிழனும் , தங்கள் ஆதரவை நல்குவார்கள் என்று எதிர்பார்பூம்……..வாழ்ழ்க….dato ரவி…வாழ்க மோகன்…வாழ்க பொன் ரங்கன்…
ராமசாமி மண்டோர் அவர்களே ,,கோமணம் என்ன்கையா மிஞ்சியது ! கோமானதைதான் ம இ காரன் உருவி விட்டானய்யா ,,மலேசியா திரு நாட்டில் பிறந்தா கோமணம் இல்லாமல் தான் சுத்த வேண்டி இருக்கும் ,,ஏன்னா வாயில்லா ஜீவன் பைரவன் கௌவிரமொ என்ற ஒரு பயம்தான் .
முக்கிய குறிப்பு :::::dorai அவர்களே ,எதுக்கெடுத்தாலும் நாம் இந்தியன் இந்தியன் என்று சொல்லிக்கொண்டால் தமிழ் இனமே காணாமல் போய்விடும் .யாரு இந்த இந்தியன் ?இந்தியாவில் இருந்து வந்த மலையாளியும் இந்தியன் ,ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கரும் இந்தியன் வட நாட்டில் இருந்து வந்தவனும் இந்தியன் ,தமிழ் நாட்டில் இருந்து வந்தவனும் இந்தியன் ,,இதில் என்ன ஒரு அதிசியம்னா ,மலேசியாவுக்கு வந்தவன் அனைவரும் தமிழில் தான் பேசுகிறான் ! ஏன் ஒருத்தருக்கொருத்தர் தமிழில் பேச வேண்டும் ? மலேசியாவில் 1000 அதிகமான தமிழ் பள்ளிகூடங்கள் தான் இருந்தது .அப்படி பார்த்தல் இந்த நாட்டிற்கு தமிழன்தான் ரப்பர் மரம் வெட்டவும் ,தண்டவாளம் போடவும் அழைத்து வர பட்டனர் .அப்படி பார்த்தல் நான் மலேசிய தமிழர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் ,இந்தியன் என்று சொன்னால் அரசாங்கத்தில் இருந்து கிடைக்க வேண்டிய சலுகைகள் ( கல்வி,வியாபாரம் ,கலாசாரம் )திசை மாறி போய்விடும் .தமிழையும் தமிழனையும் காப்பாற்ற வேண்டு மென்றால் நாம் மலேசிய தமிழன் என்றுதான் சொல்லிக்கொள்ள வேண்டும் .MALAYSIA TAMIL ASSOCIATION என்று கட்சி பெயரை மாற்றினால் சிறப்பு .வாழ்க தமிழ் வாழ்க தமிழன்