பெர்ன் : உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்து நாட்டில், அனைவருக்கும், மாதந்தோறும், குறைந்த பட்ச ஊதியம் வழங்கும், புரட்சிகரமான திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்றவற்றை ஒழிப்பதற்கு, உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த பிரச்னையை சமாளிக்க, மக்கள் அனைவருக்கும், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை ஊதியமாக வழங்க, சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் படி, ஒருவருக்கு, 1.70 லட்ச ரூபாய் ஆண்டு ஊதியம் கிடைக்கும். சுவிஸ் நாட்டின் மக்கள் தொகை, 8 கோடி. ஏழை, பணக்காரர், முதியவர், பெண்கள் என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும், மாதந்தோறும், குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட உள்ளது.
ஆனால், இந்த உதவித்தொகையை பெறுவதற்கு, 21 வயது நிரம்பி இருக்க வேண்டும்; குற்றப்பின்னணி ஏதும் இருக்கக்கூடாது. இந்த உதவி தொகையை, 1.92 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும், என, ஒரு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
“குறைந்தபட்ச மாத வருமானம் கிடைத்தால், குழந்தைகளின் கல்வித்தரம் உயரும்; நோயாளிகள் நல்ல மருத்துவ சிகிச்சையை பெற முடியும். அனைத்து நாடுகளிலும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், அந்நாட்டில் வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிக்க முடியும்’ என, நிபுணர்கள் கருதுகின்றனர். ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை, பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த திட்டம் நல்லவர்கள் ஆட்சியில் இருந்தால் நடக்கும்,நம்ம நாட்டிலேதான் ஒரே முள்ளமாரியும் முடிச்ச்சவீகியுமா
இருக்குங்களே! அப்புறம் கிணறு காணாமல் போன கதைதான்!
எத்தணை பெரிய நாட்டுக்கு எத்தணை பெரிய அறிவு இருக்கு ,,துப்பு கேட்ட மலேசியாவையும் நாடே சிரிக்கும்
சுவிட்சர்லாந்து மக்கள் தொகை சுமார் 8 மில்லியன். 8 கோடி என்பது தவறு. இது போன்றதில் நாம் சில வேலைகளை பெரிய தவறு செய்கிறோம். 8 கோடி என்பது 80 மில்லியன். சோம்பேறிகள் நிறைய உள்ள நாடுகளில் இதை அமல் செய்தால் சில ஆண்டுகளில் அந்த நாடு திவால் ஆகி விடும். மக்கள் நாட்டுப்பற்றுடன் தன்மானம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அரசாங்கம் ஊழல் அற்றதாக இருக்க வேண்டும். நம் நாட்டிலும் இந்தியாவிலும் இது முடியுமா..?! சிங்கப்பூரில் முடியும். ஆனால் திடகாத்திரம் உள்ளவர்கள் கண்டிப்பாக உழைக்க வேண்டும் என்பது அவர்களின் நல்ல கொள்கை. அங்கு எதுவும் ஈனாம் கொடுத்து மக்களை ஏமாற்ற்ய்வது இல்லை. அதனால் அந்த நாட்டின் பொருளாதாரம், மேம்பாடு உலகோர் வியக்கும் வகையில் ஓங்கி உள்ளது.