அரசாங்கக் கடன், இவ்வாண்டு அக்டோபர் முடிய ரிம529.6 பில்லியனாக கூடி இருக்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) விகிதத்தில் 53.6 விழுக்காடாகும்.
ஆனாலும் கடன் நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் இன்று நாடாளுமன்றத்தில் அளித்திருந்த எழுத்துவடிவிலான பதிலில் கூறினார்.
ஜூன் மாதம் கடன் அளவு ஜிடிபி-இல் 53 விழுக்காடாக இருந்தது. அரசாங்கம் அதன் கடன் அளவுக்கு ஒரு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது. அது ஜிடிபி-இல் 55 விழுக்காடாகும்.
529.6 பில்லியன் கடன் கட்டுபாட்டில் இருக்கிறதா? என்ன ஒரு சவுடாலான கேனதனமான பதில். பாரிசான் அரசாங்கம் இன்னும் 5 ஆண்டுகளில் இந்த நாட்டை திவாலாக்காமல் ஓய மாட்டார்கள். பல பில்லியன்கள் பூமிபுத்ராக்களுக்கு அள்ளி கொடுக்கிறார்கள் இந்தியர்களுக்கு அள்ளி எல்லாம் கொடுக்கவேண்டாம், கிள்ளியாவது கொடுத்திருக்கலாமே. மலேசியாவின் கடனில் பாதி அம்னோ அரசியல்வாதிகளின் கணக்கில் இருக்கிறது, ஆனால் அந்த கடன் சுமையை ஒவ்வொரு பிரஜையும் ஏற்க வேண்டிய பரிதாப நிலை. 13வது தேர்தலில் பாரிசானுக்கு வாக்களித்த ஜடங்கள் செய்த மிகப்பெரிய தவறு, திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.
ஒரு திருத்தும் ! அரசாங்க கடன் என்பது தவறு , மலாய்காரர்களுக்காகவும் – அம்னோ கட்சிக்காகவும் அரசாங்கம் பட்ட கடன் 529.6 பில்லியன் என்றுதான் கூறவேண்டும் , அதுதான் உண்மை . கடன் என்றால் ஒட்டுமொத மக்கள் தலையில் மிளகாய் அரைப்பது, ஆனால் செலவு செய்வதெல்லாம் ஒரு இனத்துக்கு ? ஹுடுத் வரட்டும் உனக்கும் கை இருக்காது !!