யோங் பெங் பள்ளி மாணவி கொலை: பிரதமர் அன்வார் அதிரடி உத்தரவு
ஜொகூர், யோங் பெங் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் 16 வயது மாணவி ஐரின் சோஃபியா (Irene Sofiya) காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மற்றொரு 16 வயது மாணவர் கைது செய்யப்பட்டு 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து எவ்வித ஒளிவுமறைவுமின்றி, மிகத் துரிதமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
























