நாடாளுமன்றம், மலேசியாவில் வேவுபார்த்ததாகக் கூறப்படும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்றை நிராகரித்தது.
அத்தீர்மானத்தை ஷம்சுல் இஸ்கண்டர் அகின் (பிகேஆர்- புக்கிட் கட்டில்) கொண்டுவந்தார். ஆனால், வேவுபார்த்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் அமெரிக்க தூதரகத்துக்கு ஏற்கனவே ஆட்சேபக் குறிப்பு அனுப்பி விட்டதால் தீர்மானம் அவசரமான ஒன்றல்ல என்று கூறி அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அதைத் தள்ளுபடி செய்தார்.
அமெரிக்கா ஆஸ்திரேலியா சிங்கப்பூர் ஆகியவற்றை எதிர்க்க நமக்கு எப்பொழுது தைரியம் இருந்தது??? இந்தோனேசியாவை பாருங்கள் அவர்கள் ஆஸ்திரேலியாவை ஆட்டிப்பார்க்கிறார்கள்.