சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் பறக்கும் ஹெலிகொப்டரை ஜேர்மன் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
பொதுவாக ஹெலிகொப்டர்கள் புறப்படும் போதும், பறக்கும் போதும் கடுமையான அதிர்வுகளையும், சத்தத்தையும் எழுப்புகின்றன.
இதனால் பறக்கும் தூசு, சத்தம் போன்றவற்றால் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றது.
சத்தம் ஏதும் இல்லாமல், அதிர்வுகள் இன்றி பறக்கும் ஹெலிகொப்டரை ஜேர்மனியின் இ-வாலோ என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இதன் என்ஜினில் வாலோகாப்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதற்கு உலக நாடுகளிடம் பெரும் வரவேற்பு உள்ளது.
மேலும் இந்த ஹெலிகொப்டர் விமானத்தை போன்று செங்குத்தாக விண்ணில் பாய்ந்து, அதே போன்று தரையிறங்கும் தன்மை கொண்டது.
இதன் முதல் சோதனை பயணம் கடந்த 17ம் திகதி ஜேர்மனியில் உள்ள கரிஷ்ருக் பகுதியில் வெற்றிகரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.