கான் மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிட முடிவு

1 ganமசீச உதவித் தலைவர் கான் பிங் சியு-வும் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர், ஏற்கனவே போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள துணைத் தலைவர் லியோ தியோங் லாயையும் முன்னாள் தலைவர் ஒங் தி கியாட்டையும் எதிர்த்துக் களம் இறங்குகிறார்.

இன்று கோலாலும்பூரில் விஸ்மா மசீச-வில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கான் தம் முடிவை அறிவித்தார்.

டிசம்பர் 19-இலிருந்து 21வரை நடைபெறும் மசீச ஆண்டுக் கூட்டத்தின்போது கட்சித் தேர்தலும் நடைபெறும்.