கிளந்தான் மந்திரி புசார் அஹ்மட் யாக்கூப்பும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சந்திக்கும்போது ஹுடுட் அமலாக்கம் பற்றித்தான் கலந்துரையாடுவார்களே தவிர, பரவலாகக் கூறப்படுவதுபோல் மலாய் ஒற்றுமையைப் பற்றியல்ல.
“மாநில அரசு ஹுடுட் சட்டத்தைச் செயல்படுத்த எண்ணம் கொண்டிருப்பதை அவருக்குத் தெரியப்படுத்துவோம்”, என்று அஹ்மட் கூறியதாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் அறிவித்துள்ளது.
மாநிலத்தின் உள்கட்டுமானத்தை மேம்படுத்துவது பற்றியும் பிரதமருடன் விவாதிக்கப்படும் என்றாரவர்.
எனவே, அச்சந்திப்பு மலாய்-முஸ்லிம் ஒற்றுமை மீதான கலந்துரையாடலோ அம்னோ-பாஸ் கலந்துரையாடலோ அல்ல என்றவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இவனுங்க ஒரு (பச) கொசக்காவடிங்க, எவன பார்த்து ஹுடுட் பற்றி விவாதிக்க போறானுங்களாம், இவனே ஒரு ,,ஆள்தான் தூயாவுக்கு சொந்த காரன் ,போங்கடா டேய் ,போயி வேலைய பாருங்கடா ,தேங்கா தலையுனுங்க்கள