அகதிப் பெண்களை சீரழிக்கும் நாடு

syria_womenலெபானான் நாட்டில் சிரியாவை சேர்ந்த அகதிப் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

சிரியாவில் நேர்ந்த வன்முறையிலிருந்து தப்பித்து வந்த அந்நாட்டு பெண்கள் லெபனான் நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இப்பெண்கள் அந்நாட்டு பணியாளர்கள், நில உரிமையாளர்கள்,உள்ளூர் உதவி குழுவினரால் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என மனித உரிமை ஆணையம் கடந்த புதனன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டமாஸ்கஸ் பகுதியில் வசிக்கும் ஹலா(53) என்ற பெண் மனித உரிமை ஆணையத்திடம் கூறுகையில், என்னுடைய நான்கு குழந்தைகளை காப்பாற்றுவதற்காக 10 நபர்களிடம் பாலியல் தொந்தரவுக்குள்ளானேன்.

மேலும் தனது 16 வயது பெண்ணிடம் அங்கிருந்த ஆண்கள் தவறாக நடந்து கொள்ள முயன்றதால் தனது வேலையை விடுத்து தேவாலயத்தின் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கொடுமைகள் குறித்து மனித உரிமை ஆணையத்தின் இயக்குனர் கெர்தொல்ஸ் கூறுகையில்,மரணபாதையிலிருந்து தப்பி வந்த அகதிப்பெண்களுக்கு நாம் சொர்க்கம் போல் பாதுகாப்பு அளிக்கவேண்டுமே தவிர பாலியல் கொடுமையை இழைக்கூடாது என்று கூறியுள்ளார்.

இதுப்பற்றி ஐக்கிய நாடுகள் தெரிவிக்கையில் இரண்டரை ஆண்டிற்கு முன்பு 8,00,000 பெண் அகதிகள் லெபனானில் தஞ்சமடைந்தனர்.

ஆனால் அவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கு மேலாகவே இருக்கும், ஏனெனில் பலர் தங்களை பற்றிய விபரங்களை பதிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் லெபனானின் அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் அகதிகள் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இந்த பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படக்கூடிய அகதிகளுக்கு தங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.