ஷா அலாமில் வரும் சனிக்கிழமை முஸ்லிம்களுக்கான பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளவர்கள் பற்றிய விவரங்களை திரட்டியதும் பாஸ், பிகேஆர் கட்சிகள் தனித்தனிக் கூட்டங்களை நடத்தும்.
இவ்வாறு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
“அந்தப் பேரணியில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் அதற்கு யார் ஆதரவளிக்கின்றனர் என்ற விவரங்களை நாங்கள் இன்னும் திரட்டி வருகிறோம். அத்துடன் அது உண்மையில் சமயத்தை தற்காக்கும் நோக்கத்தை கொண்டுள்ளதா என்பதையும் அறிய முயலுகிறோம்.”
“அந்தப் பேரணிக்குப் பின்னணியில் உள்ளவர்கள், மதுபானத் தொழிலில் பங்குரிமை பெற்றுள்ள முஸ்லிம்கள் பற்றி எதுவும் பேசவில்லை. சூதாட்டம் சட்டப்பூர்வமானதா என்பது மீது கூட அவர்கள் தங்கள் நிலையை விளக்கவில்லை”, பெற்றுள்ள பாஸ், என்றார் அன்வார்.
அந்த விவகாரத்தில் பல தகவல்களைப் பேரணியில் பங்கேற்பு குறித்து முடிவு செய்ய பக்காத்தான் விட்டு விடுவதாகவும் அவர் நாடாளுமன்றக் கட்டிடத்தில் எதிர்த்தரப்புத் தலைவருடைய அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
அப்போது டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் (ஈப்போ தீமோர் எம்பி) பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் (மாராங்) ஆகியோரும் உடன் இருந்தார்கள்.
“முஸ்லிம்களின் சமயத்தை காப்பாற்றும்” நோக்கத்தைக் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ள அந்தப் பேரணிக்குப் பின்னணியில் தங்களது அரசியல் எதிரியான அம்னோ இருப்பதாக தாங்கள் சந்தேகம் கொள்வதாக அன்வார் மேலும் கூறினார்.