எல்லையில் ஏவுகணைகள் நிலை நிறுத்த ரஷ்யா முடிவு

rmமாஸ்கோ: எல்லை பகுதிகளில், கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய, 22 நவீன ஏவுகணைகளை வைக்க, ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது.

பனிபோர் நடந்த காலத்தில், அமெரிக்காவும், ரஷ்யாவும் போட்டி போட்டுக்கொண்டு ஆயுதங்களை தயாரித்தன.

2010ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஆயுதங்களை குறைக்கும் நோக்கில், அமெரிக்காவும், ரஷ்யாவும், அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.செசன்யா பயங்கரவாதிகளால், ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல் உள்ளது.

இந்நிலையில், “”அடுத்த ஆண்டு இறுதிக்குள், எல்லைப் பகுதியில், கண்டம் விட்டு கண்டம் தாக்கும், 22 ஏவுகணைகள் நிறுத்தப்படும்,” என, ரஷ்ய அதிபர், விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.

ரஷ்யாவிடம், கண்டம் விட்டு கண்டம் தாக்கும், 326 ஏவுகணைகளும், 1,050 அணு ஆயுதங்களும் உள்ளன. ரஷ்ய அதிபரின் அறிவிப்பை அடுத்து, “கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், எல்லை பகுதியில், காற்றுப் புகாத இடத்தில் நிறுத்தப்படும்’ என, பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.