சந்திரனில் துளசி செடி: நாசாவின் அதிரடி திட்டம்

thulasi_001சந்திரனில் தாவரங்களை வளரச் செய்யும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் 2015ம் ஆண்டு முதல் ஈடுபட உள்ளது.

இதற்கான பணிகள் தற்போதே தொடங்கப்பட்டுவிட்டது, தற்போது எந்த வகை பயிர்களை முளைக்க வைப்பது என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளது.

இதில், டர்னிப் எனப்படும் சீனம் முள்ளங்கி, துளசி, ஓமம் மற்றும் அராபி டாப்சிஸ் என்ற ஒருவகை தாவரத்தை பயிரிட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றின் விதைகள் 5 முதல் 10 நாட்களில் முளைக்கும் தன்மை உடையது.

இதற்காக 2015ம் ஆண்டில் ஆய்வு கூடம் ஒன்று அனுப்பப்படுகிறது.

இந்த விதைகளை முளைக்க வைத்து காய்கறி விளைவிப்பதன் மூலம் அங்கு மனிதன் தங்கி உயர் வாழ முடியுமா என்ற ஆய்வையும் தொடர்ந்து நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.