அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் ஒன்றான செயின்ட் லூயிஸில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து தமிழர்களின் புராதன அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மிகவும் பிரபலமான திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினர் அமெரிக்காவிற்கும் பறை இசையை கொண்டு வரவேண்டும் என்று விரும்பினர்.
அமெரிக்காவிலும் தமிழர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வரும் பொங்கல் விழாவிலும் பறை நிகழ்ச்சி இடம்பெறுகிறது. சிகாகோ தமிழ் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் யூலை மாதம் மாதம் செயின்ட் லூயிஸில் நடைபெற உள்ள பெட்னாவின் 2014 தமிழ் விழாவிலும் பறை இசைக் குழுவின் நிகழ்ச்சி இடம்பெறுகிறது.
அமெரிக்க பல்கலைகழங்களுடன் இணைந்து தமிழ் மொழியியல் இசையாக பதிவு செய்யும் முயற்சியிலும் உள்ளார்கள்.
ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நகரத்தில் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடனத்துடன் பறை இசை எழுப்பி தமிழர்களின் பண்டைய பாரம்பரியத்தை செயின்ட் லூயிஸ் தமிழ் ஆர்வலர்கள் புதுப்பித்து வருகிறார்கள்.
இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பொற்செழியன், புவனேஸ்வரி, நந்தகுமார், செந்தில் நாயகி, வீணா, அசோக், ரம்யா, யசோதா மற்றும் பிரிதிவிராஜ் ஆகிய அனைவருமே கணனி துறையில் வல்லுனர்கள் ஆவார்கள்.
தமிழ் ஆர்வத்தினால் தமிழர்களின் பாரம்பரிய கலையை அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தவும், அமெரிக்கர்களுக்கு தமிழர்களின் தொன்மையை எடுத்துரைக்கவும் இந்த அரிய முயற்சியில் பங்கெடுத்து வருகிறார்கள்.
மேலும் தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கிடைக்கும் நன்கொடைத் தொகையை முழுமையாக, தமிழகத்தில் உள்ள பறை இசைக் கலைஞர்களின் நலனுக்காக அனுப்பி விடுகிறார்கள்.
அமெரிக்கா முழுவதும் நிகழ்ச்சி நடத்தி வரும் இந்த குழுவை [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.பார் போற்ற தமிழர் கலை வளர்ப்போம்.
வளர்க தமிழ் பாரம்பரியம்.
பறையோசை விண்னை முட்டட்டும் !
தமிழன் உடைய பறையை மற்றும் அல்ல கலையையும் உலகம் முழுவதும் பரப்புங்கே, கர்நாடக சங்கிதம் பரத நாட்டியம் மற்றும் குச்சுபொடி இன்னும் பல வந்தேறிய கலை களை தமிழனிடத்தில் வந்தேறிகள் ஆழ பதித்து விட்டார்கள்.
அருமையான முயற்சி பாராட்டுகள்..! வாழ்க.. வளர்க..!
பறையடிப்பவனை கீழ் சாதி என்று சொல்லி தள்ளி
வைத்து இழிவுப் படுத்திய ஈனப்பிறவிகளின் முகத்தில்
காரி உமிழுங்கள். காலம் மாறி விட்டது, சாதி பேதமின்றி நம் நாட்டில் இளைஞர்கள் பறை அடிக்கிறார்கள்!! இதைத் தான் ‘பெரியார் சிந்தனைகள் வெல்லும்’ என்று சொன்னோம். இன்று பறை அமெரிக்கா
சென்று விட்டது. உலகம் முழுவதும் பறை இசை பரவப் போகிறது,
மகிழ்ச்சி. வாழ்க, வளர்க பறை இசை… ‘பெரியார் சிந்தனைகள் வெல்லட்டும்’
பறை ,பறை ,தமிழர்களின் பறை ,உலகெயெங்கும் ஒலிக்கட்டும் பறையின் ஒலி,வீரமறவர்களின் விடுதலையின் வேட்கை பறைகொண்டு தட்டி எழுப்பட்டும் , விடியலுக்கு விடுதலை கிடைக்கட்டும் ,தமிழர்கள் வாழ்வில் வசந்தம் பிறக்கட்டும் ,
வாழ்த்துக்கள் .
பறை இசை கண்டுபிடிட்டவன் தமிழன், தமிழன்னை பறையன் சொன்னால் மட்டும் ஏன் கோவம் வருகிறது?
பறையா என்னும் சொல் உலகின் எல்லா மொழிகளிலும் பாவிக்க படுகின்றது ஆனால் இது ஒரு தமிழ் சொல் …சகல ஐரோப்பிய மொழி அகராதிகளில் இந்த சொல் ஒரு தமிழ் சொல் என்று குறிப்பிட பட்டு உள்ளது ..அனேகமாக …கிரேக்க ..ரோமானியா நாட்டினரால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே …ஆசியாவில் இருந்து இந்த சொல் ஐரோப்பாவுக்கு அறிமுக படுத்தபட்டு இருக்கவேண்டும்
அட பாவிகளா பறை அடிக்கிற தொழிலை வாதாடா இவ்வளவு நாளாக இந்த கூறுகெட்ட தமிழனுங்க ஏளனம் பண்ணிகிட்டு இருந்தானுங்க ,,,,அட கருமம் புடிச்சவனுங்க்களா
ஐ தண்ட நக்க ஐ ஐ டண்டனக்கா , பட்டைய கிளப்புங்க மச்சி ,தார தம்பட்டைஎல்லா பிஞ்சி கிழிஞ்சி தொங்க வேண்டாமா
“பறையன்” என்ற சொல் ஒரு தொழிற்பெயர். அதைச் சொல்லுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், பிறப்பால் ஒருவரை அவ்வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் அல்லது புரியால் இழிவுபடுத்தும் / நிந்திக்கும் வகையில் பயன்படுத்தினால். நிச்சயம் கோபம் வரத்தானே செய்யும் நாகேஸ்வரா? ஒரு சமயம் பண்டிதன் மேடையில் சொன்னார், உப்பைத் தின்னவனுக்த்தான் அதன் அருமை தெரியும் என்று. பாதிக்கப் பட்டவர்களுக்கும், பாதிக்கப் படுபவர்களுக்கும் தான் அதன் வலி தெரியும்.
வாழ்க பறையன் வளர்க பறைர்கள்! பறையர்கள் என்று சொல்லிகோடல் வேட்கம்மா?