உலக கோடீஸ்வர தலைவர்களின் பட்டியல்: விளாடிமிர் புடின் முதலிடம்

putin-powerஉலக கோடீஸ்வர தலைவர்களின் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதலிடம் பிடித்துள்ளார்.

உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், ஜனாதிபதிகள் இடம்பிடித்திருக்கின்றனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத சோனியா காந்தியும் இடம்பெற்றிருக்கிறார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்- முதலிடம்

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புதினின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர். கோடீஸ்வர தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.

தாய்லாந்து மன்னர்- இரண்டாவது இடம்

30 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறார் தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்.

புருனே சுல்தான்- மூன்றாவது இடம்

20 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் புருனே சுல்தான் ஹஸனல் பொல்கியா 3வது இடத்தில் இருக்கிறார்.

சவூதி அரேபியா அரசர்– நான்காவது இடம்

18 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் சவூதி அரேபிய அரசர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ்க்கு 4வது இடம் கிடைத்திருக்கிறது.

அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி– ஐந்தாவது இடம்

ஐக்கிய அரபு எமிரேட்சின் ஜனாதிபதி கலிபியா பின் ஜையத் அல் நஹ்யானின் சொத்து மதிப்பு 15 பில்லியன் டொலர்.

துபாயின் சேக் முகமது பின் ரஷீத்– ஆறாவது இடம்

துபாய் ஆட்சியாளர் சேக் முகமது பின் ரஷீத்தின் சொத்து மதிப்பு 14 பில்லியன் டொலர்.

வடகொரியாவின் கிம் ஜோங் யுன்– ஏழாவது இடம்

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் யுன்னின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டொலர்.

Liechtenstein இளவரசர் ஹன்ஸ் ஆதம்-II – எட்டாவது இடம்

8வது இடத்தில் Liechtenstein இளவரசன் ஹன்ஸ் ஆதம் -II. இவரது சொத்து மதிப்பு 5 பில்லியன் டொலர்.

மொராக்கோ மன்னர்– ஒன்பதாவது இடம்

மொராக்கோ மன்னர் முகமதுவுக்கு 2.5 பில்லியன் டொலர் சொத்து.

சிலி நாட்டு ஜனாதிபதி– பத்தாவது இடம்

சிலி நாட்டு ஜனாதிபதி செபஸ்டினுக்கு 2.5 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு.