உலக அளவில் மனித உரிமைகளை மீறும் நாடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

humanrightsதத்தம் நாட்டு மக்களின் மனித உரிமைகளுக்கு ஆபத்தைத் தோற்றுவிக்கும் நாடுகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 20லிருந்து 34ஆக உயர்ந்துள்ளதாக உலக அளவில் ஆபத்துக்கள் பற்றி பகுப்பாய்வு செய்யும் ஒரு நிறுவனம் கூறுகிறது.

பிரிட்டனிலிருந்து இயங்கும் இந்த மேப்பிள்க்ராப்ட் என்ற நிறுவனம், குறிப்பாக மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்ரிக்கப் பகுதியிலேயே இந்த அதிகரிப்பு நடந்திருப்பதாக கூறுகிறது. சிரியாவும் சூடானும் இந்தப் பட்டியலின் மேல் இடங்களில் இடம்பெறுகின்றன.

பொருளாதார ரீதியாக சக்தி வாய்ந்த நாடுகளான இந்தியா மற்றும் சீனாவும் இந்தப் பட்டியலில் மேல் பகுதியில் இடம் பெறுகின்றன.

இந்த நாடுகளில் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும், கருத்துச் சுதந்திரமும் பாதிக்கப்படுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. -BBC