சீன பிராந்தியத்தில் தொடரும் பதற்றம்: அமெரிக்காவும் எச்சரிக்கை

biden_china_001கிழக்கு சீனக்கடல் பகுதியை வான் பாதுகாப்பு மண்டலமாக சீனா அறிவித்திருப்பதை அங்கீகரிக்க மாட்டோம் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சீனா சென்றுள்ள ஜோ பிடன், ஜீ ஜின்பிங்கை புதன்கிழமை இரவு சந்தித்துப் பேசினார். இதன் போது அமெரிக்காவின் நிராகரிப்பு விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பின்னர் அமெரிக்க அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

சீனாவின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க அந்நாடு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஜோ பிடன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதியில் நிலவும் எல்லைத் தகராறுகள் குறித்து ஜோ பிடனிடம் ஜின்பிங் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகள் தொடர்பாக சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

அந்தக் கடல் பகுதியை தனது வான் பாதுகாப்பு மண்டலமாக சீனா தன்னிச்சையாக அறிவித்ததால், அந்நாட்டுக்கும் ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.