அமெரிக்க நிறுவனம் ஒன்று பீருக்கு இந்து கடவுளான சிவனின் பெயரை வைத்ததுடன் அவரது புகைப்படத்தை பாட்டிலில் ஒட்டியுள்ளதற்கு உலக இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க, அவுஸ்திரேலிய நிறுவனங்கள் தங்களின் பீர் பாட்டில்களில் இந்து கடவுள்களின் புகைப்படங்களை போட்டு சர்ச்சையில் சிக்கின. பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ஆஷ்வில் ப்ரூயிங் கம்பெனி புது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
ஆஷ்வில் ப்ரூயிங் கம்பெனி தயாரித்துள்ள பீர் ஒன்றுக்கு இந்து கடவுளான சிவனின் பெயரை வைத்து சிவா பீர் என்ற பெயரில் விற்பனை செய்கிறது. மேலும் பீர் பாட்டிலில் சிவன் நடராஜர் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை ஒட்டியுள்ளது.
பீருக்கு சிவனின் பெயரை வைத்து அவரின் புகைப்படத்தை ஒட்டியுள்ளதற்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்து அரசியல் தலைவர் ராஜன் ஜெட் கூறுகையில், இந்து மதத்தில் சிவன் போற்றப்படும் தெய்வம். அவரை கோவில்களிலும், பூஜை அறைகளிலும் வைத்து பூஜிக்க வேண்டுமே தவிர வியாபார பேராசையால் அவரது பெயரையும், படத்தையும் பீருக்கு பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.
நாம் காட்டிய வழியை அவர்கள் பின்பற்றுகிறார்கள். இதில் கோபப்பட என்ன இருக்கிறது? அண்மையில் வெளிவந்த நவீன சரஸ்வதி சபதம் என்ற படம் உள்பட அனைத்து தமிழ்ப்படங்களும் இந்து மதத்தையும் இந்து சாமியார்களையும் சமய வழிபாட்டு முறைகளையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக இழிவுபடுத்தி வருகின்றன. இது போதாதென்று பக்தி என்ற போர்வையில் நமது இந்து மதக் காலாடிகள் தலையில் பீர் போத்தலை வைத்து ஆடுவது, சத்து மலேசியா, எம். யு. கால்பந்து குழு போன்றவற்றின் சின்னங்களை காவடியில் வைத்து ஊர்வலம் செல்வது, ஊர்வலத்தில் பக்தி பாடல்களை ஆபாச வரிகளில் பாடுவது என கையில் கத்தி, தலையில் டோப்பா முடி, சுருட்டு, பீர் போத்தல், வாயில் குங்குமம் என ஆப்பிரிக்க நாட்டு ஆதிவாசிகளைப் போல் வேடமிட்டு ஆட்டம் போடுவது என மற்ற இனத்தினர் பார்த்து வாய்விட்டு சிரிக்கும் அளவுக்கு இந்து மதத்தை நாமே கேவலப்படுத்திக் கொள்கிறோம். பிள்ளையார் சிவன் படத்தை குப்பை லோரியிலும் உறுதி மேளக் கும்பலின் டி சட்டைகளிலும் அச்சடித்து நாறடிக்கிறோம். இதை விடவா வெள்ளைக்காரன் இந்து மதத்தை கேவலப்படுத்தி விட்டான்
ஆஹா,நல்லா சொன்னீங்க தம்பி.தைபூசமன்று பார்க்கணுமே நம்மவர்களின் சேட்டையை.பக்தி என்ற போர்வையில் இவர்கள் செய்யும் அட்டகாசம் சகிக்கமுடியவில்லை.என்று திருந்துமோ இந்த சமுதாயம்!!!!!!!!!!!!
கஜேந்திரன் சொல்வது உண்மையே.என்றுதான் நம்மவர்கள் திருந்துவார்களோ. நம்மவர்களுக்கும் இந்துகளுக்கும் மட்டரக எண்ணங்கள் அதிகம். பெருந்தன்மை என்பதே கிடையாது,வறட்டு கௌரம்- பகட்டு .எல்லாம் நல்ல கல்வி இல்லாததுதான்
உலகத்திற்கே படியலக்கும் பார்வதி, பரமேஸ்வரன்,சிவன் என்று பீற்றிக்கொள்கிறோம். இந்து கடவுளான சிவனை எப்படி தெரியாமல் போனது அமெரிக்கனுக்கு?தெரிந்திருந்தால் இந்த தவற்றை seithirukka மாட்டானே.? அப்படியிருக்க ஒரு பழதிற்காக உலகை வலம்வந்த முருகனை தெரிந்திருக்க உலக மக்களுக்கு வாய்ப்பு இல்லையே..!! இந்தகடுப்பில் பழனியில் செட்டிலாகிவிட்டத்தையும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட சினிமா படத்தில் பார்த்துள்ளேனே? பொய்யா …!!!!(நக்கல் செய்கிறேன் என்று என்னவேண்டாம்)யோசிக்கவும்…
கஜேந்திரன் சொல்வது உண்மையே.என்றுதான் நம்மவர்கள் திருந்துவார்களோ. நம்மவர்களுக்கும் இந்துகளுக்கும் மட்டரக எண்ணங்கள் அதிகம்.பெருந்தன்மை என்பதே கிடையாது,வறட்டு கௌரம்- பகட்டு
முதலில் சாமிக்கு பீர்,சுருட்டு,பால்,தேங்காய், பழங்கள் ( நீங்கள் படைத்த உணவுகளை கடவுள் என்றைக்காவது சாப்பிட்டது உண்டா) குடுப்பதை பற்றி யாரவது என்றைக்காவது சிந்தித்தது உண்டா? கடவுள் நம்மளை காக்கணும் ( சூப்பர் பவர்) நம்மளுக்கு படைய்க்கணும் அவர்தான் கடவுள், இங்கு என்னண்டா எல்லாம் தலை கீழா நடக்குது.