சீனாவில் 25வது மாடியிலிருந்து வீசப்பட்ட குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது.
சீனாவின் சோங்கிங் நகரை சேர்ந்தவர் லீ ஷெங்சோங். இவரது ஒரு வயது மகன் யுவான். பெற்றோர் வேலைக்கு சென்ற பின் இந்த குழந்தையை அவனது பாட்டி கவனித்து வந்தார்.
இவர்களது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் லீ என்ற சிறுமி இந்த குழந்தையுடன் விளையாடுவதற்காக அடிக்கடி இவர்களது வீட்டுக்கு வந்து செல்வாள்.
இந்நிலையில் சிறுமியினுடைய சக்கர நாற்காலியில் யுவானை உட்கார வைத்து அவனது பாட்டி விளையாட்டு காட்டி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் சிறுமியிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.
அதற்குள்ளாக குழந்தையின் மீது கொண்ட கோபத்தால் அவனை அடித்து உதைத்த சிறுமி அதன் பின் 25வது மாடியில் உள்ள தன் வீட்டு பால்கனியிலிருந்து குழந்தையை தள்ளி விட்டுள்ளாள்.
பின்னர் பாட்டி வந்து கேட்ட போது குழந்தையை ஒருவர் தூக்கி சென்றதாக கூறியுள்ளாள். இதற்கிடையே தரை தளத்திலிருந்த புதருக்கிடையே குழந்தை யுவான் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டான்.
இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் மூலம் குழந்தை உயிர்பிழைத்துள்ளது.
இந்நிலையில் குழந்தையை, சிறுமி தாக்கியது, தள்ளி விட்டது போன்ற காட்சிகள், அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் பொலிசில் புகார் செய்துள்ளனர்.
ஆனால் சிறுமிக்கு 10 வயதே ஆவதால் அவளை கைது செய்ய முடியாது. எனவே குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை அச்சிறுமியின் பெற்றோர் ஏற்றுள்ளனர்.