மறைந்து சென்று தாக்கும் ரகசிய உளவு விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

planeவாஷிங்டன், டிச. 8– மறைந்து சென்று தாக்கும் ரகசிய உளவு விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது.

அமெரிக்கா உளவுத்துறை ஏற்கனவே ஆளில்லா விமானங்களை (டிரோன்ஸ்) பயன்படுத்தி வருகிறது. அதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து ஏவுகணைகளை வீசி அழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது, அதைவிட மிகவும் சக்தி வாய்ந்த மறைந்து சென்று தாக்க கூடிய ஆளில்லா விமானங்களை அமெரிக்க விமானப்படை ரகசியமாக தயாரித்து வருகிறது.

இதற்கு ஆர் கியூ–180 என பெயரிடப்பட்டுள்ளது. அதன் பரிசோதனை நிகழ்ச்சி நிவேடாவில் உள்ள ரகசிய குரூம் லேக் விமானபடை தளத்தில் வெற்றிகரமாக நடந்தது.

அது மிக நீண்ட தூரம் பறந்து சென்று இலக்கை குறி வைத்து தாக்க கூடியது. இன்னும் பல கட்ட சோதனைக்கு பிறகு இந்த விமானங்கள் வருகிற 2015–ம் ஆண்டில் விமானபடையில் சேர்க்கப்பட உள்ளது.